உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியோர் கல்வித் திட்டம் 657 பெரியாரைச் சந்தித்தேன் அந் நிலையில் அண்ணா அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் காலை, தந்தை பெரியாரைப் பார்க்கச் சென்றேன். காந்தி நகரில் திரு. கி. வீரமணி அவர்கள் இல்லத்தில் தந்தை பெரியார் கவலையும், ஏக்கமும் எதிர்பார்ப்பும் தோய்ந்தவராக இருக்கக் கண்டேன். சில நொடிகள் வரை என்னால் பேச முடியவில்லை. பிாக சமாளித்துக்கொண்டு, "அய்யா, இங்குத் தாங்கள் மட்டும் தனியாக இருக்கிறீர்களே” என்று பேச்சைத் தொடங்கினேன். "ஆமாம். மணியம்மாவை ஒரு பக்கமும், வீரமணியை வேறொரு பக்கமும் தூது அனுப்பியுள்ளேன். "நீங்கள் கேள்விப்பட்டீர்களோ என்னவோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அடுத்த முதல்வராக எவர் வருவது என்பதைப் பற்றிக் கடுமையான போட்டி முளைத்துவிட்டது. “கலைஞரும், நாவலரும் பலமாகப் போட்டியிடுகிறார்கள். போட்டியிட்டு எவர் வென்றாலும் அது கட்சிக்குள் உட்பகையை வளர்க்கும். எனவே போட்டியைத் தவிர்ப்பது அவசரமான காரியமாகும். o "கலைஞர் முதல்வரானால் நல்லது என்று நான் கருதுகிறேன். அப்படியே இங்கு வந்தவர்களிடம் சொல்லி அனுப்புகிறேன். “மணியம்மா சிலரைப் பார்த்து என் கருத்தைச் சொல்லி விட்டுவரப்போயிருக்கிறார். வீரமணியையும் வேறு சிலரிடம் தூது அனுப்பியுள்ளேன்” என்று கூறிவிட்டுச் சிறிது தயங்கினார். பின்னர், “நான் உங்களை ஒன்று கேட்கலாமா?” என்று பெரியார் கேட்டார். “என்ன அய்யா, அப்படிக் கேட்கிறீர்கள்? தங்களுக்கு இல்லாத உரிமையா?” என்றேன். + - “காங்கிரசு ஆட்சிக் காலத்தில் பெரிய அலுவலர்களில் நீங்கள் தான் நாவலரோடு நேசமாகவும், தாராளமாகவும், வெளிப் படையாகவும் பழகி வந்ததாகக் கேள்வி. “சில நேரங்களில், அரசு கூட்டங்களிலிருந்து நாவலரை உங்கள் காரில் அவர் இல்லத்துக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறீர் களாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/676&oldid=788502" இலிருந்து மீள்விக்கப்பட்டது