பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658 நினைவு அலைகள் “இப்படி ஊரில் பேச்சு இது மெய்தானா?” என்று பெரியார் கேட்டார். “மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் என்று எவரையும் நான் அலட்சியப்படுத்தியதில்லை. அவரது மாணவப் பருவத்திலிருந்து நாவலரை அறிந்தவன் என்கிற முறையில் அவரைக் கோட்டையில் இருந்து அழைத்துக்கொண்டு அவரது இல்லம் சென்றிருக்கலாம். “காமராசரோ, மற்றவர்களோ அதைத் தவறாக நினைக்க வில்லை என்பதால் துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் பழகியிருக்கிறேன்” என்று உண்மையை ஒப்புக் கொண்டேன். “தாங்கள் நாவலருக்கு மிகவும் வேண்டியவர் என்பதால் உங்களிடம் ஒளிக்காமல் சொல்கிறேன். "போட்டி என்று வந்தால், கலைஞர்தான் வெற்றி பெறுவார். அது நாவலரின் நில்ையைத் தாழ்த்திவிடும். -- “அதற்குப் பதில் நாவலர் போட்டி இடாமல் கலைஞரை ஆதரித்தால், நாவலரைத் துணை முதல்வராக ஆக்குவதற்கு நான் ஆவன செய்வதோடு, நாவலர் விரும்புகிற துறைகளை அவரிடம் ஒப்படைக்கும்படி செய்கிறேன். 'நாவலரின் நன்மையைக் கருதி நீங்கள் இதை அவரிடம் தெரிவிக்க முடியுமா? “சிறிதுநேரத்துக்கு முன்புதான் திரு. இராசராமை நாவலரிடம் இதே செய்தியோடு துது அனுப்பியுள்ளேன். “உங்களுக்குக் கேடு வராதென்றால், நான் சொன்னதை உங்கள் அமைச்சரிடம் சொல்லலாமா?” என்று பெரியார் பெருங் கவலையோடு கேட்டார். ா அப்போது நாவலர் கல்வியமைச்சர் நான் அவரின் கீழ்ப் பணிபுரியம் தலைமை அலுவலன். எனவே, பெரியார் மதிப்பீட்டை நாவலருக்குத் தெரிவிப்பதே கடமை என்று எண்ணினேன். ஆகவே, பெரியாரின் செய்தியைக் கொண்டுசெல்ல இசைந்தேன். நாவலரிடம் சென்றேன் அடுத்த நொடி பெரியாரிடம் விடைபெற்றுக் கொண்டு, நாவலர் இல்லத்துக்கு விரைந்து சென்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/677&oldid=788503" இலிருந்து மீள்விக்கப்பட்டது