உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- EE2 நினைவு அலைகள் நாவலர் பிறந்த நாள் வாழ்த்து அவ் வானை வெளியான சில நாள்களில், நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுடைய பிறந்தநாள் விழா வந்தது. அவர் அமைச்சரவையில் இல்லாவிட்டாலும், அவருக்கு அமைச்சருக்குரிய மதிப்பைக் கொடுக்க விரும்பினேன். எனவே, அன்று அவரது இல்லத்திற்குச் சென்று பெரிய மலர் மாலையைச் சூட்டிப் பிறந்த நாள் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டேன். அவரும் அன்போடு நெடுநேரம் அளவளாவினார். நாவலர் சாகித்ய அகாடமி உறுப்பினரானார் இப்போது மற்ற்ொரு செய்தி நினைவுக்கு வருகிறது. நான் புதுதில்லியில் கல்வி அமைச்சரகத்தில், இணை ஆலோசகராக இருந்த்போது, அலுவல் பற்றி, சாகித்ய அகாடமியின்’ உறுப்பினர்களில் ஒருவன் ஆனேன். . . அக் கழகத்தில் எல்லா இந்திய மொழிகளுக்கும், பிரதிநிதித் துவம் உண்டு. தமிழுக்கான இடம் காலியானபோது நான் அக் கழகத்தில் உறுப்பினராக இருக்க நேர்ந்தது. அப்போது நான் காலியிடத்திற்கு நாவலர் நெடுஞ்செழியனை சேர்த்துக் கொள்ளலாம் என்று முன் மொழிந்தேன். அது ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது நாவலர் சென்னை மாநிலக் கல்வி அமைச்சராக விளங்கினார். 70. தமிழகத்தில் பொது நூலக இயக்கம் கல்வி வளர்ச்சி மேம்பாடு ஆகியவை பற்றியே எழுதி வந்த நான் பொது நூலக இயக்குநராக ஆற்றி வந்த பணிய்ைச் சொல்ல வேண்டாமா? - கல்வி கரையில; அதன் வளர்ச்சியும் வரையில; கற்கும் ஆண்டுகளோ சிலவே. - எனவே, கல்வி நிலையங்களில் கற்பதிலும் அதிகமாகத் தனிப்படிப்பு வாயிலாகக் கற்பது, இக் காலத்திற்கு இன்றியமை யாதது. இதை உணர்ந்தவர்கள் சிலர். அவர்களில் ஒருவர் டாக்டர் எஸ். ஆர். ரங்கநாதன் அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/681&oldid=788508" இலிருந்து மீள்விக்கப்பட்டது