பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமழகத்தில் பொது நூலக @uézio 663 அவரது முன் முயற்சியால் சென்னை மாகாணப் பொது நூலகச் சட்டமொன்று நிறைவேறியஆl. அய்ம்பதுகளின் தொடக்கத்தில் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. - அதன்படி பொதுக்கல்வி இயக்குநரே பொது நூலக இயக்குநராகவும் பணிபுரிய வேண்டி இருந்தது. 1951இல் அக்டோபரில் நான் பொதுக்கல்வி இயக்குநரான போது, பொது நூலக இயக்குநராகவும் பொறுப்பு ஏற்றேன். பொதுக்கல்வி வளர்ச்சியிலும் சீர் அமைப்பிலும் தனி நாட்டம் செலுத்தியதால் பொது நூலகப் பணி சுணங்கிற்றோ என்று அய்யுறத் தேவையில்லை. பொது நூலகப் பணி பொது நூலகப் பணியும் அதே கவனம் பெற்றது. மாவட்ட நூலக ஆணைக் குழுவின் தலைவர்களும் ஆர்வத்தோடு ஒத்துழைப்பு தந்தார்கள். நான் நூலகப் பொறுப்பேற்கும்போது, மாவட்டம் தோறும் மைய நூலகம் இயங்கி வந்தது. கிளை நூலகமோ, மாநிலம் முழுவதற்கும் ஒன்றுதான் இருந்தது. - முதலில் எல்லா நகரங்களிலும் கிளை நூலகங்கள், அடுத்துப் பேரூர் தோறும் கிளை நூலகம், பெரிய சிற்றுார் தோறும் நூல் வழங்கு மையங்கள் அமைப்பது என்ற குறிக்கோளோடு திட்டமிட்டுச் செயல்புரிந்தோம். * ஒவ்வொரு அய்ந்தாண்டுத் திட்டத்திலும், புதிய நூலகங்கள் திறப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது நாட்டின் தேவைக்குப் போதுமானதாக இல்லை. அறிவுத் தேரின் ஒரு பக்கச் சக்கரங்கள் கல்வி நிலையங்களாகும். மறுபக்கச் சக்கரங்கள் எவை? பொது நூலகங்களே மறுபக்கச் சக்கரங்கள் ஆகும். எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை பெருகப் பெருக பொதுநூலகங்களும் பெருகிக் கொண்டே போக வேண்டும். பொது நூலகங்களைப் போதிய எண்ணிக்கையில் திறக்க முடியாதபடி நிதிப் பற்றாக்குறை குறுக்கிட்டது. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/682&oldid=788509" இலிருந்து மீள்விக்கப்பட்டது