பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 நினைவு அலைகள் பொது நூலக இயக்குநராகிய நான் சில நூலகக் குழுத் தலைவர்களோடு கலந்து ஆலோசித்துப் புதிய ஏற்பாடு ஒன்று செய்தேன். - அது, மாவட்ட நூலக நிதியை எங்கே வைத்திருப்பது என்பதைப் பற்றியதாகும். அரசின் கருவூலங்களில் மட்டுமே நிதியைப் போட்டு வைக்கலாம் என்பது விதிகளில் ஒன்று. மதுரை மாவட்ட நூலகக் குழுவின் தலைவராகிய திரு. அழகப்பன், “அந்தப் பணத்தை வங்கிகளில் போட்டு வைத்தால் வட்டி கிடைக்கும். அதைக் கொண்டு நூலகங்களை வளர்க்கலாம். “எனவே, வங்கிகளில் போடுவதற்கு நடைமுறை விதியை மாற்றுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அம் மாற்றத்தை அரசுக்குப் பரிந்துரைத்தேன். அரசு விரைவில் இசைவு தந்தது. அம் மாற்றம் ஒரளவு நூலக நிதி நிலைமையை உயர்த்திற்று. o * பொதுமக்களிடம் நன்கொடை அடுத்துப் பொதுமக்கள் நன்கொடையைத் திரட்ட முயல்தல். 'இலவசக் கட்டிடமும், சில ஆயிரம் ரூபாய்கள் நன்கொடையும் வழங்கும் நகரங்களுக்கு, நூலகம் திறக்க முன் உரிமை வழங்குவோம்’ என்று திட்டம் இட்டோம். அது செயல்பட்டது. அந்த உதவியினால் பல கிளை நூலகங்களைத் திறக்க முடிந்தது. அடுத்து நூலக உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் ஆர்வம் காட்டினேன். - உறுப்பினராகும் ஒவ்வொருவரும் நூல்களை வீட்டிற்குக் கொண்டும் செல்லும் உரிமை பெற, காப்புப் பணமாக ஐந்து ரூபாய் செலுத்த வேண்டும். o உறுப்பினர் எண்ணிக்கை தீவிரமாக வளர்ந்தபோது காப்புப் பணமும் பெருகிற்று. அப் பணத்தை வங்கிகளில் நீண்டகால வைப்பு நிதியாகப் போட்டதால், கணிசமான வட்டி கிடைத்தது. அத் தொகை சிறு நூலகங்கள் திறப்பதற்கு உதவிற்று. ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/683&oldid=788510" இலிருந்து மீள்விக்கப்பட்டது