உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sufigså$éo Quirgil Elrevo Guásin B71 “இந்தியர்களாகிய நாம் நன்னம்பிக்கைக்கு அடிப்படையான நூல் ஒன்றையும், "தமிழர்களாகிய நாம் பொதுமறையாகிய திருக்குறளை இரண்டாம் நூலாகவும் காந்தியடிகளின் சுயசரிதையை மூன்றாம் நூலாகவும் தமிழ் அகராதி ஒன்றை நான்காம் நூலாகவும் தமிழைப் பிழையின்றி கற்பிப்பதைப் பற்றிய நூல் ஒன்றை ஐந்தாவது நூலாகவும் வாங்கி வைத்து நூலகத்தைத் தொடங்குங்கள். “பின்னர் அவ்வப்போது சிறு நூல்களை வாங்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படிச் சேர்க்கப்படும் நூல்கள் நல்லவையாக இருக்கட்டும். “நல்ல நூல்கள் என்பதற்கு அடையாளங்கள் சிலவாகும். அவை யாவை? மனிதனுடைய தன்னம்பிக்கையை வளர்ப்பன நல்ல நூல்கள். மனிதர்கள் இடையே ஒற்றுமையையும் நட்பையும் வளர்ப்பவை நல்லவை. “உள்ளக் காழ்ப்புகளையும் கசப்புகளையும் களைவன, நல்ல நூல்கள்; சிலத்தை, சமுதாயக் கண்ணோட்டத்தை வளர்ப்பன நல்லவை. “எல்லோரும் ஒர் குலம், எல்லோரும் ஒர் இனம் என்னும் உணர்வூட்டுவன, சிறந்த நூல்களாகும்.” இப்படி அமைந்தது என் பேச்சு. o ஆசிரியர்களின் ஆர்வம் அம்மம்ம எப்படி நன்றி கூறுவேன். எப்படிப் பாராட்டுவேன்? தமிழ்நாட்டு ஆசிரியர்கள், சிறப்பாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அவ்வுரையை வேத வாக்காக ஏற்றுக் கொண்டார்கள். குடும்பத்திற்கோர் நூல் நிலையம் தொடங்கினார்கள். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அப்படிச் செய்தார்கள். செங்கற்பட்டு மாவட்டத்தில் வாலாஜாபாத் என்ற பேரூர் ஒன்றுள்ளது. அதை மையமாகக் கொண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம் நடந்து வந்தது. அதில் ஏறத்தாழ 200 பேர்கள் இருந்தார்கள். அத்துணை பேரும் மேற்படி ஐந்து நூல்களையும் வாங்கி விடுவதாக முடிவு செய்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/690&oldid=788518" இலிருந்து மீள்விக்கப்பட்டது