உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 நினைவு அலைகள் திருவள்ளூரில் கனிந்த நற்பணியைச் செய்தித் தாள்கள் நன்றாக விளம்பரப்படுத்தின. அந்தப் பணி பிற நகரங்களுக்கும் பரவிற்று. அடுத்த சில திங்களில் செங்கற்பட்டு நகரில் ஐம்பது ஆசிரியைகள் நூல் பரப்பும் தொண்டினை ஊதியமில்லாது ஏற்றுக் கொண்டார்கள். பயன் கருதா அப் பணி காஞ்சிபுரத்திற்குப் பரவிற்று. நூறு ஆசிரியைகள் நூலகத் தொண்டாற்றினார்கள். மற்ற நகரங்கள் பின்னடைய வில்லை. மதுரை, கோவை,சேலம் போன்ற பல நகரங்களில் இத் தொண்டு முளைத்துத் தழைத்தது. - மொத்தத்தில் சில ஆயிரம் ஆசிரியைகள் பெண் இனத்திற்கு அறிவுத் தொண்டு ஆற்றும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இத்தகைய பணிகளில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தது. தமிழ்நாட்டு ஆசிரியர் சமுதாயம், தியாக வரலாறு படைத்து வந்தது. அது எனக்கு வாழ்வூட்டும் அமிழ்தமாய்ப் பயன்பட்டது. சமுதாய மாற்றம் இரவு பகல் பாராமல் காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணி வரை, பம்பரமெனச் சுழன்று கல்வித் தொண்டும் நூலகத் தொண்டும் ஆற்றுவதற்கு ஆற்றல் தந்தது. “சமுதாய மாற்றம் என்பது எங்கோ வானத்திலிருந்து பொழிவதல்ல; சமுதாயத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களும் தனித்தனியே மாறுவதின் கூட்டலே சமுதாய மாற்றம் ஆகும். “தனித்தனி மனிதர்கள் மாற்றம் அடைந்து மேம்படுவதற்கு ஆணிவேரானவை அறிவு நாட்டமே. “தொடர்ந்து கற்றுக் கொண்டு இருத்தலே." ஆளுக்கொரு நூல் நிலையம் இக் கருத்தினை ஒரு பொதுக்கூட்டத்தில் வெளியிட்டேன். “ஆளுக்கொரு நூல் நிலையம் வைத்துக் கொள்ளுங்கள். 'குறைந்தது ஐந்து நூல்களாவது வாங்கி வையுங்கள். பின்னர் முடிந்தால் நூல்களின் எண்ணிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/689&oldid=788516" இலிருந்து மீள்விக்கப்பட்டது