பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

673 71. சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரானேன் பொது மருத்துவமனையில் பெரியார் 1969ஆம் ஆண்டு ஜூன் திங்கள் ஒருநாள் பிற்பகல் சென்னை அரசின் தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். நான் உயர்கல்வி இயக்குநராகவும், மற்றும் கூடுதல் செயலராகவும் இருந்ததால் முற்பகல் துங்கம்பாக்கம் கல்வி இயக்ககத்திலும், பிற்பகல் கோட்டையிலும் அலுவல் பார்க்கும் முறையை வைத்துக் கொண்டிருந்தேன். “தங்களுக்குத் தெரியுமா? தந்தை பெரியார் உடல் நலக்குறைவோடு சென்னைப் பொது மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்” என்று நண்பர் ஒருவர் தகவல் கொடுத்தார். அலுவலக நேரம் முடிந்ததும், வீட்டுக்குத் திரும்பும் வழியில் பொது மருத்துவமனைக்குச் சென்றேன். பெரியார் இருந்த அற்ைக்குச் சென்றேன். அவர் தனியே இருந்தார். என்னைக் கண்டதும் ஒரே பூரிப்பு. பெரியாரின் கவலை “ஒருவரும் இல்லை; கதவை மூடுங்கள்” என்று கட்டளை யிட்டார். அப்படியே செய்தேன். நெருக்கமாக வந்து உட்காரும்படி ஆணையிட்டார். கீழ்ப் படிந்தேன். “ஒய்வு வயதை ஐம்பத்தெட்டிலிருந்து ஐம்பத்தைந்தாகக் குறைத்து உங்களுக்கும், வேறுபலருக்கும் மூன்று மாத முன்னறிவிப்புக் கொடுத்திருக்கிறார்களாமே மெய்தானா?” என்று கேட்டார். “ஆம் ஐயா. கல்வித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல; நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அதேபோல் செய்திருக் கிறார்கள்” என்றேன். “ஏதோ சமாதானம் செய்வதற்கு இப்படிச் செய்திருக்கிறார்கள். தில்லியிலிருந்த உங்களை அண்ணா அழைத்து வந்தால், பின்னால் வந்தவர்கள், வீட்டுக்கு அனுப்புவதா?” இக் கேள்வியைக் கேட்கும்போது பெரியார் முகம் கோவைப் பழமாகச் சிவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/692&oldid=788520" இலிருந்து மீள்விக்கப்பட்டது