பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 நினைவு அலைகள் துணைவேந்தராக வேண்டும் - பெரியாரின் ஆசை சில மணித்துளிகளில் சமாளித்துக் கொண்டு “உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, நான் சொல்வதைக் கேளுங்கள். ட்ாக்டர்.லட்சுமணசாமி முதலியார் துணைவேந்தர் பதவியிலிருந்து விலகப் போகிறார். அந்த இடத்திற்கு நீங்கள் வரவேண்டும் என்பது என் ஆசை” என்று பெரியார் கூறிக் கொண்டிருக்கையிலேயே குறுக்கிட்டேன். முதலியாரின் முயற்சி "ஐயா! டாக்டர் முதலியார் பத்தாவது முறை துணைவேந்தராக வருவதற்கு விரும்புகிறார். அதற்கு முயல்கிறார் என்று கேள்வி' என்று கூறினேன். பெரியாரின் பதில் “டாக்டர் முதலியார் உலகப் புகழ் பெற்றவர். அவரால் நமக்குப் பெருமை உண்டு அதற்கு இடையூறாக உங்களைப் போட்டியிடச் சொல்லமாட்டேன். “நீங்கள் கேள்விப்பட்டதில் தவறில்லை. டாக்டர் இலட்சுமண சாமி முதலியாரும், டாக்டர் ராமசாமி முதலியாருமாகச் சேர்ந்து, முதலமைச்சர் கருணாநிதியைக் கண்டார்கள். மேலும் ஒரு முறை வாய்ப்புக் கொடுக்கும்படி கேட்டார்கள். “முதலமைச்சர், அவர்களைக் கல்வி அமைச்சரையும் காணும்படி கூறினார். அப்படியே கண்டார்கள். முதலமைச்சரோ, கல்வி அமைச்சரோ இதுபற்றி முடிவு செய்யப் போவதில்லை. அமைச்சரவையே முடிவெடுக்க நேரிடலாம்’ என்று கல்வி அமைச்சர் மாண்புமிகு மாதவன் பதில் உரைத்தார். “அடுத்து, டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் மட்டும் முதலமைச்சரைக் கண்டு, நடந்ததைக் கூறினார். அப்போது முதலமைச்சர் இளைஞர்க்கு இடம்விட்டால் நன்றாயிருக்காதா? என்று கேட்டார். துணைவேந்தர் ‘என் மகன் டாக்டர் வேணுகோபால் பெயரைச் சிந்திக்கலாமா?’ என்று கேட்டார். இந்தியாவிலும் நேரு குடும்பம் ஒன்றில்தான் தந்தைக்குப் பின் மகன் என்பதை ஏற்றுக் கொள்வார்கள்’ என்று முதல்வர் பதில் கூறினார். டாக்டர் இலட்சுமணசாமி முதலியார், அக்குறிப்பைப் புரிந்து கொண்டார். எனவே, ஒய்வு பெற ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/693&oldid=788521" இலிருந்து மீள்விக்கப்பட்டது