பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரானேன் 675 பெரியாரின் கட்டளை "ஆகையால் நீங்கள் அப் பதவிக்கு வரவேண்டும். அதற்காக உடனடியாக முதலமைச்சரைக் கண்டு கேளுங்கள். “பேட்டிக்கு நேரங் கேட்டால் காலதாமதம் ஆகிவிடும். பேசாமல் நாளைக் காலை முதலமைச்சர் வீட்டுக்குச் செல்லுங்கள். உங்களைப் பார்க்காமல் அனுப்பிவிடமாட்டார். பேட்டியின்போது சுருக்கமாக வேண்டுகோளோடு நிறுத்திக் கொள்ளுங்கள். சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி காலியாவதாக இருந்தால் என்னையும் சிந்தியுங்கள் என்று மட்டும் வேண்டிக் கொண்டு பேச்சை நீட்டாமல் வந்துவிடுங்கள்” என்று பெரியார் விரிவான கட்டளையிட்டார். முதல்வரைச் சந்தித்தேன் அப்படியே முன்னறிவிப்பு இன்றி முதலமைச்சர் இல்லத்துக்குச் சென்றேன். நான் வந்திருப்பதைக் கேள்விப்பட்டதும் சிறிதும் காக்க வைக்காமல், என்னை மாடிக்கு அழைத்தார். மாடி அறைக்குள் சென்றதும் புன்முறுவலோடு “சொல்லிவிட்டு வந்திருக்கலாமே” என்றபடியே, எழுந்து, என்னைக் கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் அமர்ந்ததும் என் வேண்டுகோளை ரத்தினச் சுருக்கமாகக் கூறினேன். “நீங்கள் கேட்டா கொடுக்க வேண்டும்?” என்ற கேள்வி புன்முறுவலோடு வந்தது. - கிங் முதலமைச்சருக்குரிய மரியாதை கொடுக்க வேண்டாமா?” என்று பதிலிறுத்தேன். “நல்லது” என்று முதலமைச்சர் கூறவும், அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன். அங்கிருந்து நேரே சென்னைப் பொது மருத்துவமனைக்குச் சென்றேன். நடந்தவற்றைப் பெரியாரிடம் கூறினேன். பெரியாருக்குக் கொள்ளை மகிழ்ச்சி. “இனிமேல் நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று சொல்லி அனுப்பினார். துணைவேந்தர் தேர்வுக் குழு சென்னைப் பல்கலைக் கழகம் புதிய துணைவேந்தர் நியமனத்துக்காக விதிமுறைகளின்படி நடவடிக்கைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/694&oldid=788522" இலிருந்து மீள்விக்கப்பட்டது