உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 நினைவு அலைகள் மேற்கொண்டது. பழைய முறையில் பல்கலைக் கழகப் பேரவையே மூவர் பெயரைப் பரிந்துரைக்கும். புதிய முறையில் ஒரு தேர்வுக் குழு மூவரைப் பரிந்துரைக்கும். அக் குழுவிற்கு ஆட்சிக் குழு ஒரு உறுப்பினரையும், பேரவை மற்றொரு உறுப்பினரையும் நியமிக்கும். இப் பெயர்கள் அரசுக்கு அறிவிக்கப்படும். ஆளுநர் மூன்றாவது உறுப்பினரை நியமிப்பார். அவரே கூட்ட அமைப்பாளராக இருப்பார். திருவாளர்கள் நீதிபதி வீராசாமி, நாராயணசாமிப் பிள்ளை, ஜெ. சிவானந்தம் ஆகிய மூவரும் குழுவின் உறுப்பினர்கள். அக் (Յ(ԼՔ கூடி- மூவர் அடங்கிய பட்டியலை ஆளுநர்க்குத் தந்தது. ஆளுநர், சர்தார் உஜ்ஜயில்சிங், அரசைக் கலந்து ஆலோசித்தார். முதலமைச்சர் மாண்புமிகு கருணாநிதி, என்னை ஆதரித்தார். கல்வி அமைச்சர் மாதவன் திரு. ஜி. ஆர். தாமோதரனை ஆதரிப்பதாகப் பேச்சு அடிப்பட்டது. நான் அதுபற்றிக் கவலைப்படவில்லை. எதிர் முயற்சியிலும் ஈடுபடவில்லை. இதற்குள் தமிழகம் முழுதும் இது பற்றியே பேச்சாக இருந்தது. தமிழ்நாட்டுப் பெரியோரில் பலர், இதில் அக்கறை காட்டினார்கள். செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தைய செட்டியார், பொள்ளாச்சி தொழிலதிபர் திரு. என். மகாலிங்கம் முதலியோர் பலமுறை என்னோடு தொடர்பு கொண்டு ஆலோசனை கூறினார்கள். --- வதந்தி வெளியில் எவருக்கும் பட்டியலில் எவரெவர் பெயர் உள்ளது என்பது உறுதியாகத் தெரியாது. அத்தனையும் வதந்தி, அந்நிலையில் நியமன நாள் நெருங்குகையில் புதியதோர் வதந்தி வந்தது. நம்பத்தக்கவர் விவரம் அறிந்து கொள்ளும் நிலையில் உள்ளவர் ஒரு பெயரை என் காதில் போட்டார். எனக்குப் பதில் பல்லாண்டுகளுக்கு முன்னரே ஒய்வுபெற்ற அப் பெரியவரை நியமித்தால் பெரியார் நிறைவு கொள்வார் என்று முதல்வரிடம் தக்கவர் ஒருவர் கூறினதாக வதந்தி வந்தது. - இவ் வதந்தியை என் மனைவி காந்தம்மாவிடம் கூறினேன். "நீங்களாக இப் பதவிக்கு ஆசைப்படவில்லை. பெரியார் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து முயல்கிறீர்கள். இது தவறிவிட்டால் உங்களைவிட பெரியாருக்குத்தான் இழிவும், வேதனையும். எனவே நீங்கள் கேள்விப்பட்ட செய்தியை எவ்வளவு விரைவில் பெரியாருக்குத் தெரிவிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் தெரிவித்துவிடுங்கள். முடிவு என்ன ஆனாலும் பரவாயில்லை” என்று ஆலோசனை கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/695&oldid=788523" இலிருந்து மீள்விக்கப்பட்டது