பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரானேன் 677 அன்று முழுதும் பெரியார் திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்தார். காலை முதல் இரவுவரை பல நிகழ்ச்சிகள். அவற்றில் ஒன்று லால்குடி ஊராட்சி ஒன்றியத்தின் வரவேற்பாகும். அப்போது ஒன்றியத்தின் தலைவர் திரு. அன்பில் தர்மலிங்கம் என்பது நினைவு. பெரியாரின் துது எனவே, லால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தோடு தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டேன். தந்தை பெரியாரோடு தொடர்பு கேட்டேன். பெரியார் அவருக்கே உள்ள பெருந்தன்மையோடு பேசினார். நான் கேட்ட வதந்தியை அவரிடம் கூறினேன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, “சொன்னது நல்லதாயிற்று அறிவிப்பு வரும்வரை என்ன வதந்தி வந்தாலும் எனக்குத் தகவல் கொடுங்கள். கூச்சப்படாதீர்கள்” என்ற ஆணையோடு முடித்தார். தந்தை பெரியார் உடனே செயல்படத் தொடங்கினார். அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு க. ராஜாராம் அவர்களை அழைத்து விவரமாகச் சொல்லி முதலமைச்சரிடம் துரது அனுப்பினார். “நெ. து. சுதான் என்னுடைய கேன்டிடேட். வேறு யாரைப் போட்டாலும் எனக்கு நிறைவு தராது" - இதுதான் செய்தியின் சாரப0. கல்வி அமைச்சர் அனுப்பிய செய்தி மேற்படி துாது அனுப்புவதற்கு முன், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. காஞ்சி கல்யாணசுந்தரம் கல்வி அமைச்சர் சார்பில் என்னிடம் துது வந்தார். -- == “சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தருக்குச் சம்பளம் மட்டுமே உண்டு. அத் துணைவேந்தருக்கு இலவச வீடோ, காரோ கிடையாது. நெ. து. சு. விரும்பினால், இப்போதே அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்குத் துணைவேந்தராக நியமிக்கிறோம்; அங்கே இலவச இல்லமும், காரும் உண்டு. அங்கே போக விரும்பாவிட்டால், பாடநூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்றை உடனடியாக நிறுவி, அதன் தலைவராகவும், மேலாண்மை இயக்குநராகவும் நியமிக் கிறோம். அப் பதவிக்கு மூவாயிரம் ரூபாய் வேண்டுமானாலும் சம்பளம் கொடுப்பதோடு இலவசக் காரும், வீட்டுப்படியும் கொடுக்கிறோம். அதை ஏற்றுக் கொள்ளட்டும்.” இச் செய்தியை இரண்டு மூன்று முறை கொண்டு வந்தார். ஆனால், தான் முதலமைச்சர் சார்பில் வரவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/696&oldid=788524" இலிருந்து மீள்விக்கப்பட்டது