பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 நினைவு அலைகள் “சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நானாக முயலவில்லை; பெரியார் ஆணையிட்டார். அதை நிறைவேற்றுகிறேன். அது கிடைக்கவில்லை என்றால் ஒய்வு பெற்றுக் கொள்கிறேன்” என்று பதில் கூறி அனுப்பினேன். துணைவேந்தரானேன் 1969ஆம் ஆண்டு ஜூலை முப்பதாம் நாள், மூன்று மணி அளவில் ஆளுநரின் தனிச்செயலர், என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டு, பாராட்டிவிட்டு என்னைத் துணைவேந்தராக நியமித்திருப்பதை அறிவித்தார். o உடனே நான் திருச்சி பெரியார் மாளிகைக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டேன். எல்லாத் துறைகளிலும், எல்லா மட்டத்தினரும் கடமை உணர்ச்சியுடன் விரைந்து பணி செய்த காலம் அது. எனவே விரைவில் தொடர்பு கிடைத்தது. பெரியாரோடு பேச விரும்புவதாகக் கூறினேன். "ஐயாவுக்குக் கடுமையான நோய். வேலூர் கிறித்துவ மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள். மாலைக்குள் போய்ச் சேர்ந்துவிடுவார்கள்” என்று ஒருவர் தகவல் கொடுத்தார். என் நியமனம் பற்றி எவர் அதிகம் பூரிப்பாரோ அவருக்கு முதலில் சொல்ல முடியவில்லையே என்று வருந்தினேன். நியமனச்செய்தி சில மணித்துளிகளில் செய்தியாளர்களுக்குக் கிடைத்தது. தொலைபேசியில் பாராட்டியவர்கள் பலர். நேரில் வந்தவர்களுக்கும் குறைவில்லை. பெரியாரைச் சந்திக்க வேலூர் சென்றேன் இதற்கிடையில் நான் வேலூர் சென்று தந்தை பெரியாரைப் பார்த்து அவருக்குச் சொல்லிவிட்டு வரவேண்டும் என்று என் மனைவி கூறினார். எவ்வளவு துரிதப்ப்டுத்தியும், இரவு எட்டரை மணி அளவில்தான் புறப்பட முடிந்தது. திரு. குத்துாசி குருசாமி மகள் திரு. ருக்குகெளதமன் அப்போது காட்பாடி பிரிவில் குடியிருந்தார். அவருக்கு முன்கூட்டித் தகவல் கொடுத்துவிட்டுச் சென்றேன். . நள்ளிரவில் படுத்த நாங்கள் விடியற்காலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு பொழுது விடிய வேலூர் கிறித்தவ மருத்துவமனைக்குச் சென்றேன். பெரியார் தங்கியிருந்த அறையைக் கண்டுபிடிப்ப து எளிதாகவே இருந்தது. அவ்வறையை நெருங்குகையில் என்ன கண்டேன்? தாழ்வாரத்தில் நாற்காலியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/697&oldid=788525" இலிருந்து மீள்விக்கப்பட்டது