பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரானேன் Ε79 பெரியார் அமர்ந்து அன்றைய செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், “மிக்க மகிழ்ச்சி, இதோ காலையில் செய்தித்தாளில் வந்திருக்கிறது; என் பாராட்டு: எதற்காக இவ்வளவு தூரம் வந்தீர்கள்?” என்று கேட்டார். "ஐயாவுக்கு உடம்பிற்குச் சரியில்லை என்று சொன்னார்கள். ஆகவே, நேரில் பார்த்து விசாரித்துவிட்டுப்போக வந்தேன்” என்றேன். “எனக்கு ஒன்றுமில்லை; சிறுநீர் அடைப்பு. அதற்காகச் சிறு ஒட்டை போட்டுக் குழாய் மூலம் சிறுநீர் கழிக்க மருத்துவம் செய்யப் போகிறார்கள். அது மிகச்சிறிய விஷயம். அதற்காகக் கவலைப்பட வேண்டாம்; காத்திருக்கவும் வேண்டாம். இம் மருத்துவக் கல்லூரி உங்கள் கண்காணிப்பில் உள்ளது. அப்படியிருக்க எவருக்கும் தெரியாமல் வந்தது சரியல்ல. உரியவர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து இருந்தால், தக்க மரியாதையோடு வரவேற்றிருப்பார்கள். மற்றவர்கள் பார்ப்பதற்கு முன் புறப்பட்டுப் போய்விடுங்கள்” என்று பெரியார் கட்டளையிட்டார். சற்றுத் தயங்கினேன். ஐயாவுக்கு அறுவை மருத்துவம் ஆனபிறகு போவதாகச் சொன்னேன். பெரியார் விடவில்லை; உடனே செல்லும்படி வற்புறுத்தினார். வேறு வழியின்றிச் சென்னை செல்லப் புறப்பட்டேன். பெரியாரின் ஆணை அவ்வேளை, “நாளை கல்வி அமைச்சர் இம் மருத்துவ மனைக்கு வந்து சேருகிறார். சிலநாள் தங்க நேரிடலாம். அவர் சென்னைக்கு வரட்டும் என்று காத்திருக்காதீர்கள். ஒருநாள் இங்கு வந்து அவரைக் கண்டு மாலை அணிவித்து விட்டுச் செல்லுங்கள். அவர் உங்களுக்கு எதிர்ப்பாக இருந்தார் என்ற எண்ணம் வேண்டாம்” என்று பெரியார் ஆணையிட்டார். அவ்வாணையை நிறைவேற்றினேன். துணைவேந்தரின் வாழ்த்துப் பெற்றேன் மூத்தோரை மதிப்பதில் எனக்குத் தனி இன்பம். எனவே, எனக்கு முன் துணைவேந்தராக விளங்கி - துணைவேந்தர் தொல்லையை இருபத்தியேழு ஆண்டுகள் தாங்கிவந்த, உலகச் சாதனையாளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/698&oldid=788526" இலிருந்து மீள்விக்கப்பட்டது