பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680 நினைவு அலைகள் டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார் அவர்களைக் கண்டு, அவருடைய வாழ்த்துதலைப் பெற்ற பிறகு நான் புதிய பதவியில் சேர விரும்பினேன். அப் பெரியவரிடம் நேர்முகப் பேட்டிக்கு நேரம் கேட்டிருந்தேன். டாக்டர் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார், 18 1969 அன்று காலை 9, 15 மணிக்கு மேல் வரலாம் என்று நேரம் குறித்திருந்தார். குறித்த நேரத்திற்குச் சென்றேன். அப் பெரியவர் எனக்காகக் காத்திருந்தார். வரவேற்பறைக்குள் நுழைந்ததும் எழுந்து என் கையைப் பிடித்துக் குலுக்கிப் பாராட்டைத் தெரிவித்தார். நான் வெற்றிபெற வேண்டுமென்று நல்வாழ்த்தினைத் தெரிவித்தார். அது உதட்டளவு அன்று, உண்மையானதே என்பதை என்னால் உணர முடிந்தது. . - நம் பல்கலைக் கழகச் சட்டம், வல்லுநர் எவரையும் தேவைப்படும்போது கலந்து ஆலோசிக்க இடம் கொடுக்கிறது. அதை நீங்கள் வேண்டியபோது பயன்படுத்திக் கொள்ளலாம்; எந்தக் கோப்புகளை வேண்டுமானாலும் தேவைப்படும்போது, தட்சிணாமூர்த்தி மூலம் எனக்கு அனுப்பி வையுங்கள். நான் படித்துப் பார்த்து என் கருத்தை எழுதி அனுப்புகிறேன்” என்று கூறித் தெம்பூட்டினார். o அவர் ஆலோசனைப்படி பின்னாளில் மருத்துவத்துறை பற்றிய இரு கோப்புகள் அவருக்கு அனுப்பினேன். அவர் குறிப்பு எழுதி அனுப்பினார். அதன்படி செயல்பட்டேன். ஆட்சி குழு நிறைவாக ஏற்றுக் கொண்டது. பதவி ஏற்றேன் பேட்டிக்கு இடையில் இருவருக்கும் சாத்துக்குடிச் சாறு வந்து சேர்ந்தது. அதைப் பருகினோம். பின்னர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு நேரே சென்னைப் பல்கலைக் கழக அலுவலகம் சென்றேன். அங்கே அலுவலர்களும், பணிபுரிவோரும் அணி வகுத்துக் காத்திருந்தனர். பதிவாளர் திரு.சையத் யாகூப் என்னை வரவேற்று, மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பிறகு என்னை என் அறைக்கு அழைத்துக் கொண்டு போய் துணைவேந்தர் நாற்காலியில் உட்கார வைத்தார். டாக்டர் கோவிந்தராஜன், திரு. பன்னிர்ச்செல்வம், திரு. குமாரசாமி முதலிய மூத்த அலுவலர்கள், சிறிதுநேரம் உடனிருந்து என்னோடு அளவளாவினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/699&oldid=788527" இலிருந்து மீள்விக்கப்பட்டது