பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/700

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரானேன் FET வழிகாட்டினேன் "சட்டத்துக்கும், விதிமுறைகளுக்கும் புறம்பான எதையும் நான் இதுவரை செய்ததில்லை. இனியும் செய்ய விரும்பவில்லை. எனவே நீங்கள் தயக்கமில்லாமல் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி கோப்புகளை எனக்கு அனுப்பி வைக்கலாம். எந்த விதிக்காவது ஏற்கெனவே விதி விலக்குக் கொடுத்திருந்தால், அதைக் குறிப்பிடத் தடையில்லை என்று வழிகாட்டி அலுவலர்களை அனுப்பி வைத்தேன். என்னைக் கண்டு பாராட்ட வந்த பேராசிரியர்களுள் ஒருவர் பேச்சு வாக்கில் நஞ்சைக் கலக்க முயன்றார். “பல்கலைக் கழக அலுவலர்களில் பலர் டாக்டர் ஏ. எல். முதலியாருக்குப் பலவகையில் கடமைப்பட்டவர்கள். எனவே அவரே மீண்டும் துணைவேந்தராக வரவேண்டும் என்று முயன்றார்கள். அதை நீங்கள் கண்டு கொள்ளத் தேவையில்லை” என்று பேச்சுவாக்கில் கூறினார். “விசுவாசமுடையவர்களை நான் மதிக்கிறேன். எனவே உங்கள் செய்தி எனக்குக் கசப்பு ஊட்டாது” என்று பதில் கூறி அனுப்பினேன். பாராட்டு விழா பல்கலைக் கழகப் பணியாளர்கள், பேராசிரியர்கள், கல்விக் குழு, பேரவை ஆகியவை பாராட்டு விழா எடுத்தன. அதோடு காஞ்சி கல்யாணசுந்தரம் துாண்டுதலால் குமாரபாளையம் எஸ். ஆர். எல். சுப்பிரமணியம் என்ற தொழில் அதிபர், பொதுமக்கள் சார்பில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் முதலமைச்சர் மாண்புமிகு மு.கருணாநிதி கலந்துகொண்டு வாழ்த்துரை கூறினார். காஞ்சிபுரம் நகராட்சி எனக்கும், புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு பரூக் மரைக்காயருக்கும் ஒரே நேரத்தில் பாராட்டு விழா எடுத்தது. முன்னிருந்து நடத்திய திரு. கே. டி. எஸ். மணி அவர்களுக்குச் சிறப்பாக நன்றி உடையேன். கோவை மாநாடு ஏற்கெனவே 2. 8.1969 அன்று பொள்ளாச்சியில் தொழிலதிபர் நா. மகாலிங்கம் அவர்கள் முன்னின்று ஏற்பாடு செய்திருந்த கோவை மாவட்ட ஆசிரியர் கழக மாநாட்டில் பங்கு கொள்வதாக ஒப்புதல் தந்திருந்தேன். மகாலிங்கம் 31, 7. 1969 அன்று என்னோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/700&oldid=788529" இலிருந்து மீள்விக்கப்பட்டது