பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o o5B2 நினைவு அலைகள் தொலைபேசியில் பேசி, "துணைவேந்தர் பதவி ஏற்ற பிறகும் மாநாட்டிற்கு வந்து போக வேண்டும்” என்று வற்புறுத்தினார். எனவே 1. 8. 1969 அன்று இரவு நீலகிரி விரைவு வண்டியில், கோவைக்குப் புறப்பட்டேன். வழக்கம்போல் புகைவண்டித் தொடர், பிளாட்பாரம் வந்து நிற்கும்போதே அதற்காகக் காத்திருந்தேன். குளுகுளு பெட்டியைத் தேடி ஏறினேன். நாள் முழுதும் வேலை செய்து அலுத்த நான் ஒய்வு எடுத்துக் கொண்டேன். சில மணித்துளிகளில் எனக்குப் பழக்கமான காங்கிரஸ்காரர்கள் அப் பெட்டியண்டை வந்து நிற்கக் கண்டேன். பெருந்தலைவர், அனைத்து இந்திய காங்கிரஸ் தலைவர், மாண்புமிகு காமராசர் அவ் வண்டியில் சேலம் செல்வதாக. வந்திருந்தவர்கள் கூறினார்கள். காமராசர் வாழ்த்தினார் பதவி ஏற்ற அன்றே பெருந்தலைவரைக் கான நேரிடுவதைப் பற்றிப் பூரித்தேன். எதிர்பார்ப்பு அதிகமாயிற்று. வண்டி புறப்பட ஐந்து மணித்துளிகள் இருக்கையில், பெருந்தலைவர் காமராசர் வந்து சேர்ந்தார். நான் என் அறையிலிருந்து வெளியே வந்து தாழ் வாரத்தில் நின்று கொண்டிருந்த அப் பெரியவரை வணங்கினேன். “இந்த வண்டியில் வருகிறீர்களா? எவ்வளவு துாரம் போகிறீர்கள்?’ என்று பெருந்தலைவர் கேட்டார். "ஆம், ஐயா, கோவை வரையில் செல்கிறேன்” என்று நான் பதில் கூற, அவர், “வண்டி புறப்பட்டதும் பேசுவோம்” என்று கூறினார். நான் என் அறைக்குச் சென்றுவிட்டேன். புகைவண்டி நகரத் தொடங்கியதும் நான் தாழ்வாரத்துக்கு” வந்தேன். பெருந்தலைவர் காமராசர் தன் அறைக்குள் என்னை அழைத்துச் சென்றார். “ரொம்ப மகிழ்ச்சி” என்று சொல்லிக் கொண்டே தன் பக்கத்தில் அமரச் சொன்னார். கலைஞர் கருணாநிதிக்குப் பாராட்டு “தங்கள் வாழ்த்துதலுக்கு எனது பணிவான வணக்கம்” என்று நான் கூறினேன். உடனே காமராசர், “நான் முதலில் உங்களைப் பாராட்டியிருக்க வேண்டும். உங்களுக்குத் துணைவேந்தர் பதவி கிடைத்தது பற்றி மகிழ்ச்சியே; ஆனால், நான் முதலில் கூறியது ஜாதி, வருமானம், ஆகிய அடிப்படைகளைப் பாராமல் எல்லோருக்கும் புகுமுகக் கல்வி இலவசம் என்று அரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/701&oldid=788530" இலிருந்து மீள்விக்கப்பட்டது