பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்மதிப்பீட்டு முறை - சீர்கேடுகள் 683 ஆணையிட்டிருப்பதைப் பற்றி நினைத்துக் கொண்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். கலைஞர் கருணாநிதிதான் இந்தத் துணிவான ஆணையைப் பிறப்பித்திருக்க முடியும். நெய்க்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா? என்று குழப்பிக் கொள்ளாமல் முற்போக்கான ஆணை பிறப்பித்திருக்கிறார். அதைப்பற்றி நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவரைப் பார்த்து என் சார்பில் சொல்லுங்கள் 'அரசு உங்களைத் துணைவேந்தர் பொறுப்பில் பயன்படுத்திக் கொள்வது பற்றி எனக்குப் பெரிதும் மனநிறைவு: இயக்குநராகப் பணிபுரிந்ததுபோல், உயர்க்கல்வி மட்டத்திலும் பாடுபட்டு வளர்ச்சியும், மேம்பாடும் காணுங்கள்” என்று அனைத்து இந்தியக் காங்கிரஸ் தலைவர் காமராசர் ஆணையிட்டார். பொள்ளாச்சியிலிருந்து திரும்பியதும், முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதியைக் கண்டு இலவசக்கல்வி பற்றிய காமராசரின் பாராட்டைத் தெரிவித்தேன். காமராசரின் இரண்டாவது ஆணையையும் முழுஉணர்வோடு நிறைவேற்றினேன். ஆ! எங்கெங்கும் வளர்ச்சி இருமுறை பாடத்திட்ட உயர்வு. இவை பல்கலைக் கழகத்தின் மற்றவர்களின் ஒத்துழைப்போடு நான் செய்ய முடிந்தனவாம். சில மணித்துளிகளுக்குப்பின் காமராசரிடம் விடைபெற்றுக் கொண்டேன். என் அறைக்குச் சென்று உறங்கிவிட்டேன். 72. உள்மதிப்பீட்டு முறை - சீர்கேடுகள் கோவையில் சிறப்பான வரவேற்பு நீலகிரி விரைவு வண்டி கோவை சந்திப்புக்குள் துழைத்தது மக்கள் வெள்ளம் தென்பட்டது. ஏராளமானவர்கள் பெரிய மாலைகளோடு காத்திருந்தனர். அவை என்னை வரவேற்க என்பது தெரியாது. வண்டி நின்றதும் கோவை கல்லூரி முதல்வர்கள் திருவாளர்கள் சின்னசாமி நாயுடு, ஈ. வி. வெங்கடேசலு முதலியோர் முன்வந்து மாலையிட்டு என்னை வரவேற்றனர். பல கல்லூரிகளின் - கல்வி நிலையங்களின் - சார்பில் திரண்டிருந்த மாணவர்களை அழைத்து ஒழுங்குப்படுத்தி எனக்கு மாலையிடச் செய்தனர். ஏழைக்குப் பயன்பட்டிருக்க வேண்டிய பனம், இப்படி மாலைகளாகப் பாழாகிறதே என்று வேதனைப்பட்டேன் அவ்வேளை மாணவர் தலைவர்கள் சிலர் முன் வந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/702&oldid=788531" இலிருந்து மீள்விக்கப்பட்டது