உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்மதிப்பீட்டு முறை - சீர்கேடுகள் 693 பல்கலைக் கழகத்தின் நிதிநிலைமை கூடுதல் செலவைச் சமாளிக்கக் கூடியதாக இல்லை. அரசு, கைகொடுத்துக் காப்பாற்றினால்தான் சமாளிக்கலாம். மூன்று பல்கலைக் கழகத்துக்கும் 25 இலட்சம் “ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும், கூடுதல்நிதி உதவியை சென்னைப் பல்கலைக் கழகத்துக்குக் கொடுத்தால், அதேபோல் அண்ணாமலை, மதுரை பல்கலைக் கழகங்களுக்கும் கொடுக்க நேரிடும். மொத்தத்தில் இருபத்தைந்து, இருபத்தாறு இலட்சம் கூடுதலாகத் தேவைப்படும். o "ஆட்சிக் குழு முடிவின்படி தங்கள் உதவியை நாடுகிறேன். தயவுசெய்து மூன்று பல்கலைக் கழகங்களுக்கும் உதவுங்கள். உதவி கிடைக்காமல் போனால் ஆசிரியர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும். அவர்களைக் கட்டுப்படுத்த அரசின் காவல்துறையின் உதவியைத்தான் நாடப் போகிறோம். அரசின் உதவியில்லாமல் பல்கலைக் கழகம் அமைதியாக இயங்க முடியாது. தயவுசெய்து. கூடுதல் நிதிஉதவி கோரிவரும் விண்ணப்பத்தைக் கருணையோடு கவனித்து உதவுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன். புன்முறுவலோடு, “அனுப்புங்கள், பார்க்கிறேன்” என்றார் முதல்வர். மட்டற்ற மகிழ்ச்சியோடு விடைபெற்றுக்கொண்டேன். ஆசிரியர்களுக்கு அரசு ஊழியர்கள் பெறும், படி அளவு கொடுப்பதற்காக, ஆகும் முழுச் செலவையும் அரசு ஏற்றுக் கொள்ளும்படி கோரி அரசுக்குக் கடிதம் எழுதினேன். பணியாளர்களைப் பொறுத்தமட்டில் அப்போது தமிழக அரசின் ஊதியக் குழு செயல்பட்டு வந்தது. அதன் பரிந்துரைகள் வந்ததும், ஒவ்வொரு நிலைப் பணியாளருக்கும் அரசு விழுக் காட்டை விடச் சிறிது கூட்டிக் கொடுக்க முடிவு செய்தோம். அதற்கான கூடுதல் செலவுக்கும் அரசின் உதவியைக் கோரினோம். நிதி நிலைமையைப் பெருக்கினோம் இதற்கிடையில் பல்கலைக் கழக நிதிநிலைமையைச் சீரமைத்து மேம்படுத்த முயன்றேன். பல்கலைக் கழகத்தில் பல அறக் கட்டளைகள் உள்ளன. அவற்றில் ஏதாவது மிச்சம் ஏற்பட்டால், அவற்றைப் பொதுச் செலவுக்கு மாற்ற முடியாது.அதுபோக பொது நிர்வாகம், தேர்வுகள், பல்வேறு துறைகள் என, தனித்தனியே நிதி ஒதுக்கீடு உண்டு. அவற்றை ஆண்டு முழுவதும் நடைமுறைக் கணக்கில் வைத்திருந்து, அவ்வாண்டு முடிந்தபின், ஏதாவது மிச்சப் பட்டால், அதை மட்டும் வைப்புநிதியாகப் போடுவது வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/712&oldid=788542" இலிருந்து மீள்விக்கப்பட்டது