பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 நினைவு அலைகள் சொன்னார்கள். இதற்காகத் தமிழக அரசிடம் கூடுதல் மானியம் கேட்கலாம் என்ற எனது கருத்தை ஏற்றுக் கொண்டனர். இரண்டொரு உறுப்பினர்கள், கூடுதல் நிதி உதவி கேட்பது கானல்நீரைத் தேடுவது போலாகும் என்றனர். ஏன் அப்படிச் சொன்னார்கள்? ஏற்கெனவே அண்ணாமலை பல்கலைக் கழகச் சார்பில் சர். சி. பி. ராமசாமி ஐயர் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு முடியாது என்கிற பதிலைப் பெற்றார். மதுரைப் பல்கலைக்கழகச் சார்பில் டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் இருமுறை முயன்றும் அதே பதிலைத்தான் பெற்றார். இவற்றைச் சுட்டிக்காட்டி அவநம்பிக்கையைத் தெரிவித்தனர். முதல்வர் கலைஞரிடம் நம்பிக்கை வைத்தேன் இருப்பினும் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நிதி அமைச்சராகவும் இருந்ததால், எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. தெம்போடு அவரைப் பேட்டி கானச்சென்றேன். முன் அறிவிப்பு கொடாமல் ஓர் நாள் காலை, அவர் இல்லத்துக்குச் சென்றேன். என்னைக் காக்க வைக்காமல் பேட்டி கொடுத்தார். என் கோரிக்கை சென்னைப் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு, பல்கலைக் கழக நிதி உதவிக் குழுவின் இப்போதைய சம்பள விகிதம் நடை முறைப்படுத்தப்படுகிறது. இவ்விகிதம் நாடு முழுவதற்கும் ஒன்றே. அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி போன்றவை முதல் அய்ந்தாண்டு திட்ட விகிதத்தில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. பின்னால் வந்த உயர்வுகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவ் விகிதங்கள் மாநிலத்துக்கு மாநிலம், மாறுபடுவதால் அம் மாநில அரசு ஊழியர்கள் அவ்வப்போது பெறும் விழுக்காட்டில் கொடுக் கும்படி, மான்யக் குழு அறிவித்துள்ளது. எக் காரணம் பற்றியோ தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அதை நிறைவேற்றவில்லை. நூறு திங்கள் பொறுத்திருந்த ஆசிரியர்கள் மூன்றாவது திங்களிலேயே, புதிய துணைவேந்தராகிய என்னை மிரட்டு கிறார்கள். நியாயம் அவர்கள் பக்கம் இருப்பதால், மிரட்டுகிறார்கள் என்று கொள்ளாமல், முறையிடுவதாக எண்ணி, நீதி வழங்க நினைக்கிறேன். அதற்கு ஆண்டுக்கு பதின்மூன்று இலட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும். அதுபோக பணியாளர்கள் சம்பளங்கள் மாற்றப்படாமல் பல்லாண்டுகளாக இருக்கின்றன. அதற்கும் ஏதாவது செய்தாக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/711&oldid=788541" இலிருந்து மீள்விக்கப்பட்டது