பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்மதிப்பீட்டு முறை-சிர்கேடுகள் B91 அநேகமாக எல்லா உறுப்பினர்களும் பேசினார்கள். நான் கடைசிவரை குறுக்கிடாமல், அவர்களின் பேச்சுக்களைக் கேட்டேன். அவற்றின் சாரம் வருமாறு. ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு “நம் மூத்த பல்கலைக் கழகத்தின் வரலாற்றில் காணாத கட்டுப்பாடின்மை இப்போது தலைகாட்டுகிறது. பல்கலைக் கழக ஆசிரியர்களின் சிலர் ஆட்சிக் குழுக் கூட்டம் தொடங்குவதற்குமுன் துழைவாயிலில் நின்றுகொண்டு கோரிக்கை விண்ணப்பம் ஒன்றை ஒவ்வொரு உறுப்பினர் கையிலும் திணித்தார்கள். இந்த ஊதிய உயர்வு கோரிக்கையை எவ்வளவு மரியாதையோடு அனுப்பியிருக்க வேண்டும்! புதிய துணைவேந்தர் இத்தகைய போக்கை முளை யிலேயே கிள்ளவேண்டும். இல்லாவிடில் நிர்வாகம் சீர் குலைந்துவிடும்.” அவ்வளவையும் கேட்டபிறகு நான் பேசினேன். என் பதில் “ஆசிரியர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள படிகளை அவ்வப்போது கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது உண்மையா? இல்லையா? உண்மையாயின் அதற்கான பழியை நானும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இதில் குறிப்பிட்ட காலகட்டத்தில் தில்லிக்கு போயிருந்த ஈராண்டு தவிர, மற்ற ஆண்டுகள் நானும் இங்கே உறுப்பினனாய் இருந்தேன். எனவே, எல்லோரோடும் சேர்ந்து நானும் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். அவ்வப்போது கொடுத்திருந்தால் ஆண்டுக்குச் சில லட்சங்கள் மட்டுமே பிடித்திருக்கும். இப்போது தொடர் சுமையாக வந்து நம் முதுகை முறிக்கிறது. நம் நிலை அப்படியிருந்தால் ஆசிரியர்கள் நிலையோ பற்றாக்குறை; நீங்கள் கூறியபடி நூறு திங்கள் டொறுமை காட்டிய ஆசிரியர்கள், மேலும் சில திங்கள் பண்பைச் சிதற விடாமல் இருந்தால், அவர்கள் பெற்றுள்ள உயர் படிப்பிற்குச் சிறப்பாக அமையும். அவர்கள் மரியாதையாக நடந்திருக்கலாம் என்பதை அதிகப்படுத்தாமல் நாம் கொடுக்க வேண்டியதை எப்படிக் கொடுப்பது என்பதில் கருத்தைச் செலுத்தக் கேட்டுக் கொள்கிறேன்” என்று உணர்ச்சிவயப்படாமல் உரைத்தேன். முடியுமா? ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அமைதி பெற்றனர். எப்படியாவது பாக்கியைக் கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/710&oldid=788540" இலிருந்து மீள்விக்கப்பட்டது