பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

695 73. பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்தினோம் தரத்தை உயர்த்து சென்னைப் பல்கலைக் கழகத்தின் கல்விக் குழுவிற்கு ஒரு, தீர்மானம் வந்தது. அது என்ன சொல்லிற்று? == பல்கலைக் கழகத்தின் பல பட்டப்படிப்புகள் தரக்குறைவாக இருப்பதால், அவற்றை உயர்த்தும் பொருட்டு வல்லுநர் குழுக்களை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்து ஒய்வுபெற்ற திரு. எஸ். பார்த்தசாரதி அய்யங்கார் மேற்படி தீர்மானத்தை அனுப்பியிருந்தார். அவர் விவரம் தெரிந்தவர்;. நல்லெண்ணம் உடையவர்: கல்விக் குழுவின் உறுப்பினர். கல்விக் குழுவுக்கோ, பேரவைக்கோ வரும் தீர்மானங்களைப் பற்றித் துணைவேந்தர் தனியாக முடிவுசெய்வதில்லை. அவற்றை ஆட்சிக் குழுவின் உட்குழு ஒன்றுக்கு அனுப்புவது வழக்கம். அக் குழுவின் பரிந்துரைகள் ஆட்சிக் குழுவின் முன் வைக்கப்படும். அதுதான் இறுதி முடிவு எடுக்கும். அம் முடிவுகளையே கல்விக் குழு பேரவை, ஆகியவற்றின் கூட்டங்களில் அறிவிப்பது மரபு. “திரு. பார்த்தசாரதி அய்யங்காளின் தீர்மானம் தேவையற்றது: ஏற்கெனவே பலமுறை தள்ளப்பட்டது. எனவே, இம் முறையும் தள்ளிவிடப் பரிந்துரைப்போம்” என்று உட்குழுவும், ஆட்சிக் குழுவும் பரிந்துரைத்தன. அந்நிலை எடுக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே, மேற்படி தீர்மானத்தை விவாதித்த ஆட்சிக் குழுக் கூட்டத்தில் வெறும் தலைவனாக இராமல், வழி காட்டினேன். "நம்முடைய பாடத் திட்டங்கள் பல உயர்த்தப்பட வேண்டும்” என்ற கருத்து, கற்றறிந்த பொதுமக்களிடம் பரவலாக உள்ளது. “இல்லை சரியாக இருக்கிறது என்று வல்லுநர்கள் சிலர் கருதுகிறார்கள்.” நம்முடைய சகாவாக இருந்த திருவாளர் முத்தையன், இதுபற்றிச் சென்ற பேரவைக் கூட்டத்தில் உணர்ச்சி வயப்பட்டுப் பேசியதை நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். மிக உணர்ச்சிக்கு ஆட்பட்ட நண்பர் முத்தையன் அப்போது இருதய நோயால் தாக்கப்பட்டதையும், வேதனையோடு நினைத்துக் கொள்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/714&oldid=788545" இலிருந்து மீள்விக்கப்பட்டது