பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர் கோரிக்கைகளைத் தீர்த்து வைத்தேன் 701 வைக்கிறேன்” என்று சொல்லி விடை கொடுத்தேன். அப்படியே செய்தேன். எடுத்த முடிவை மாற்றாமல், அதை நடைமுறைப் படுத்தும் நாளை, காலவரையறையின்றி ஒத்திப் போடுமாறு பேரவை முடிவு செய்ய ஏற்பாடு செய்தேன். அப்படி பட்டமளிப்பு விழா பற்றிய சலசலப்பைச் சமாளித்தேன். o வேறு வகையான வம்பு ஒன்றைச் சமாளிக்க நேர்ந்தது. ஒரு நாள் பிற்பகல் முன் அறிவிப்பு இன்றிச் சென்னை நகரக் கல்லூரிகளிலிருந்து, கல்லூரிக்கு இருவராக, பல்கலைக் கழக வளாகத்திற்குள் கூடிவிட்டனர். பிறகு என்னிடம் பேட்டி கேட்டனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டும் பேட்டிக்கு வரும்படியாக அழைத்தேன். எண்மர் வந்தனர். இரண்டு பக்கங்கள் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பம் ஒன்றை என்னிடம் தந்தனர். பொறுமையாக அதை வரிவரியாகப் படித்துப் பார்த்தேன். பிறகு வந்த ஒவ்வொருவர் கருத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர்கள் கோரியது என்ன? ஆங்கில வழிப் பயிற்சி மொழியைக் கட்டாயப்படுத்து அரசுக் கல்லூரி ஒவ்வொன்றிலும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று பல்கலைக் கழகம் ஆணையிட வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கை. ஏன், அப்படியில்லையா? இல்லை. அறுபத்து எட்டாம் ஆண்டிலிருந்து அரசுக் கல்லூரிகளில் ஐந்தைத் தவிர, பிறவற்றில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழி என்ற திட்டத்தை அரசு, நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தது. என் விளக்கம் பல்கலைக் கழகம் பல பாடத் திட்டங்களை ஏற்று வெளியிடுகிறது. ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் கற்பிக்க இடம் கொடுத்திருக்கிறது. எந்த எந்தப் பாடங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கல்லூரியையும், பல்கலைக் கழகம் கட்டாயப்படுத்துவது மரபல்ல; அதை மாற்றினால் அது எங்கோ இழுத்துக் கொண்டு போய்விடும். ஜெயின் கல்லூரி, விலங்கியல் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று சொன்னால் எப்படியிருக்கும்? புதுக்கல்லூரியில் இந்து சமயம் பற்றிச் சொல்லிக் கொடுக்கக் கட்டாயப்படுத்துவது சரியாக இருக்குமா? விவேகானந்தர் கல்லூரியில் இசுலாமிய வரலாற்றைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/720&oldid=788552" இலிருந்து மீள்விக்கப்பட்டது