பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 நினைவு அலைகள் விடுவது, மேல் பட்டம் பெறுபவர்களுக்கும், பரிசுகள் பெறுபவர்களுக்கும் மட்டுமே சிறிய விழாவைப் பல்கலைக் கழகம் நடத்துவது. இம் முடிவு பேரவையில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி' இருப்பினும் நில அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. சில நாள்களுக்குப் பிறகு காவல் துறையின் பெரிய அலுவலர் ஒருவர் வீட்டிலிருந்த என்னோடு தொலைபேசி வழியாகப் பேசினார். பட்டமளிப்பு விழாவைக் கைவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கல்லூரி மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு ஊர்வலமாக வருகிறார்கள் என்ற தகவலைக் கூறினார். நான் வழக்கத்துக்கு முன்னதாக அலுவலகம் போய்ச் சேர்ந்தேன். ஊர்வல வருகைக்காகக் காத்திருந்தேன். ஊர்வலம் வந்தடைந்தது. அறுவரை அழைத்து வரச்சொன்னேன். பத்துப் பேர் பேட்டி கான விரும்பினர். “சரி” என்று விட்டுக் கொடுத்தேன். பத்துப் பேரும் என் அறைக்குள் நுழைந்தனர். அதிர்ச்சி அடைந்தேன். ஏன்? s பட்டமளிப்பு விழா வேண்டாம் என்று ஊர்வலத்தை நடத்தி வந்த அதே இளைஞர், பட்டமளிப்பு விழான்வ நடத்தக் கோரும் ஊர்வலத்துக்கும் தலைமை தாங்கி வந்தார்.அவரை அடையாளம் கண்டு கொண்ட நான், “வாரும் நடராஜரே! நீங்கள்தானே முந்திய ஊர்வலத்தை நடத்தி வந்தீர்கள்” என்று கேட்டேன். அவர் முகம் வெளுத்துப் போயிற்று. அவரும் மற்றவர்களும் உட்கார்ந்தபிறகு, “மனிதன் சிந்திக்கும் உயிர். சிந்தனை கருத்து மாற்றத்துக்கு வித்தாகிறது. அப்படிக் கருத்து மாறும்போது, புதிய கருத்தை ஒளிக்காமல் சொல்பவரே மனிதர். நீர் கருத்து மாறியதற்காக வெட்கடப்படத் தேவையில்லை” என்று ஆறுதல் கூறிவிட்டு, வந்தவர்கள் சொல்ல வேண்டியதைக் கேட்டேன். “நெடுநாளாக இருந்துவரும் ஒரு விழாவை எடுத்துவிட்டால் வெற்றிகரமாகப் படித்து, தேர்ச்சி பெற்றதனால் ஊறும் சுவை கெட்டுப் போகும். எனவே பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடத்துங்கள். விழா ஒழிப்பு கோரி வந்தவர்களைவிட, விழா வேண்டி வந்தவர்கள் அதிகமானவர்கள். எனவே இதை கெளரவப் - பிரச்னையாக ஆக்கிக் கொள்ள விரும்பவில்லை. மறுபரிசீலனைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/719&oldid=788550" இலிருந்து மீள்விக்கப்பட்டது