உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E99 74. மாணவர் கோரிக்கைகளைத் தீர்த்து வைத்தேன் மாணவர்கள் முற்றுகை ஒருமுறை மாணவர்கள் கூட்டமொன்று திடீரெனப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் வந்துவிட்டது. அவர்களோடு காவல்துறை அலுவலர்கள் சிலர் வந்தனர். அலுவர்களில் ஒருவர் என் அனுமதி பெற்று, என்னை வந்து கண்டார். பற்பல கல்லூரி மாணவர்கள் சேர்ந்து, ஊர்வலமாக வந்திருப்பதைக் கூறினார். மாணவர்களில் அறுவரை என்னிடம் பேட்டிக்கு அழைத்து வருமாறு கூறினேன். நான் பள்ளிக்கூட மாணாக்கரைக்கூட உட்கார வைத்துப் பேசுவதுதான் வழக்கம். அதேபோல் இவர்களையும் உட்காரச் செய்தேன். பதிவாளரையும், தேர்வுகளின் கண்காணிப்பாளரையும் வைத்துக்கொண்டு அவர்களிடம் விசாரித்தேன். பட்டமளிப்பு விழா வேண்டாம் “பட்டமளிப்பு விழா என்பது தேவையற்ற சடங்கு அந்நியர் புகுத்திய ஆடம்பரம். அதை ஒழித்து விடவேண்டும்.” இக் கோரிக்கை அடங்கிய விண்ணப்பம் ஒன்றைக் கொடுத்தனர். படித்துப் பார்த்ததும், அறுவரையும் கருத்து உரைக்குமாறு கேட்டேன். எல்லோரும் அதையே கூறினர். ". . “இக் கோரிக்கையை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து பார்த்தேன். துணைவேந்தர் மட்டும் முடிவு எடுக்க முடியாது. ஆட்சிக் குழுவும், பேரவையும் முடிவு எடுக்கும். முடிந்த அளவு விரைவில் முடிவு செய்யத் துாண்டுகிறேன்” என்று அமைதியாகக் கூறி அனுப்பினேன். மனநிறைவோடு அவர்கள் விடைபெற்றுக் கொண்டனர். கல்லூரிக்கு மாற்றப்பட்டது மேற்படி கோரிக்கையை ஆட்சிக் குழுவின்முன் வைத்தேன் நான் நடுநிலை வகிப்பதாகக் கூறினேன். குழு, அதை உட்குழு ஒன்றிற்கு அனுப்பிற்று. உட்குழுவில் இரு தரப்பு வாதங்களும் கடுமையாக இருந்தன. கல்லூரிகளின் கருத்தைக் கேட்டு, சுற்றறிக்கை அனுப்பியிருந்தோம். அவற்றுக்குள்ளும் ஒருமித்த கருத்து இல்லை. இறுதியில் பட்டமளிப்பு விழாவைக் கல்லூரிகளுக்கு மாற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/718&oldid=788549" இலிருந்து மீள்விக்கப்பட்டது