உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B98 - நினைவு அலைகள கடைப்பிடித்தோம். எனவே, என் காலத்தில் அரையாண்டுத் தேர்வுமுறை சில மேல்பட்டப் படிப்புகளில் மட்டுமே நுழைந்தது. அக் காலத்தில் தேர்வின் முடிவுகளைப் பெரும்பாலும் ரகசியமாகக் காப்பாற்ற முடிந்தது. அதற்குக் காரணம் துணைவேந்தராகிய நான் முன்கூட்டியே முடிவுகளைத் தெரிந்து கொள்ளும் அறிவிப்புக்கு இடம் கொடுக்கவில்லை. தேர்வுகளின் கண்காணிப்பாளர், முடிவுக்ள் ஆயத்தமானதும், நேரே என்னிடம் கொண்டுவந்து காட்டிக் கையெழுத்து வாங்குவார். அப்போதும் எவர் ஒருவருடைய் முடிவையும் நான் துருவிப் பார்ப்பதில்லை. எனவே, அது மற்றவர்களிடம் நல்லதற்கான அச்சத்தை உண்டாக்கிற்று. -- அனைவரும் ஒன்றே எவ்வளவு பெரிய இடத்துப் பரிந்துரையும், தேர்வு முடிவுகளை மாற்றவிடவில்லை. பொறுமையாக ஒரு காதில் வாங்கி, மறு காதில் விட்டு விடுவேன். என் தம்பி நடராஜனது மகன் பாண்டியன், புகுமுகத் தேர்வு எழுதியபோது நான் துணைவேந்தர், அவனும் எல்லோரையும் போல முடிவு ஒட்டப்பட்ட பிறகுதான், தெரிந்து கொண்டான். அவன் தேர்ச்சி பெற்றிருந்தான். சான்றிதழ் கல்லூரி வழியாகக் கிடைத்தபோது அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவன் எடுத்த பாடத்தில் ஒன்றை விட்டுவிட்டு, எடுக்காத பாடம் ஒன்றுக்கு நேரே மதிப்பெண்ணைக் குறித்திருந்தார்கள். இத்தகைய தவறுகளைக் கவனித்து, விரைவாகத் திருத்திக் கொடுக்கத் தக்க ஏற்பாடுகள் உண்டு. வரிசையில் சென்று கண்காணிப்பாளரையே கண்டு உரிய திருத்தங்களைப் பெற்றுக்கொண்டு போகலாம். பாண்டியன் அப்படி வரிசையில் நின்று, கண்காணிப்பாள்ரிடம் சென்றபோது அவர் அவனை அடையாளம் கண்டு கொண்டார். திகைப்போடு "நீயுமா வரிசையில் வரவேண்டும்.துணைவேந்தரிடம் சொல்லி, நேரே திருத்திக் கொள்ள வேண்டியதுதானே” என்று கூறினார். அவன் “எங்கள் பெரியப்பா உறவினர் என்று எந்தச் சலுகையும் கொடுக்கமாட்டார்” என்று பதில் கூறினான்.அது முதல் அலுவலகப் பணியாளர்களிடம், என்னைப் பற்றிய மதிப்பு உயர்ந்தது. அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைத்தது. வெளியில் கல்லூரிகள் அனைத்தும் ஒத்துழைப்புக் கொடுத்ததோடு மாணாக்கரும் பெரிதும் ஒத்துழைத்தனர். எனினும் சிற்சில போது வேலை நிறுத்தங்கள் தலை காட்டின. o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/717&oldid=788548" இலிருந்து மீள்விக்கப்பட்டது