உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படத்திட்டத்தின்_தரத்தை உயர்த்தினோம் -- 697 திட்டங்கள் பலவும் உயர்த்தி அமைக்கப்பட வேண்டும்; அதைப் படிப்படியாகச் செய்ய வேண்டும். - முதலில் புகுமுக வகுப்புக்கு உயர்த்த வேண்டும். அடுத்த ஆண்டுக்குள் பட்டப் படிப்புக்கான பாடத் திட்டத்தை உயர்த்த வேண்டும். அந்தப் புதுவெள்ளம், வருவதற்குள் மேல் பட்டப்படிப்பிற்கான பாடத் திட்டங்களை மாற்றிவிட வேண்டும். இது பொதுவான கருத்து. முதல்வர்கள் கூட்டம் ஆதரித்த கருத்தும் ஆகும். பாடத் திட்ட சீரமைப்புக்கு குறுக்கே நின்ற காரணங்களில் ஒன்று எவ்வளவுநேரம் மொழிப் பாடங்களுக்கு ஒதுக்குவது என்பதைப் பற்றிய கருத்து வேற்றுமை. அப்போது ஆங்கிலத்துக்கு வாரத்தில் ஏழுமண ஒதுக்கியிருந்தார்கள். தமிழுக்கு ஆறு மணி ஒதுக்கியிருந்தார்கள். - மொழிப் பாடத்துக்கு சம பங்கீடு ஆங்கிலப் பேராசிரியர்கள் ஏழுமனியே போதாது என்று வாதிட்டார்கள். தமிழ்ப் பேராசிரியர்கள் ஆங்கிலத்துக்குச் சமமாகவாகிலும், தமிழுக்கு ஒதுக்க வேண்டுமென்று போராடினார்கள். மிகப் பொறுமையாக இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, இறுதியில் இருமொழிகளுக்குமே சமகாலம். அது வாரத்துக்கு ஆறுமணி என்று முடிவு செய்தோம். அது தொட்டக்கத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் விரைவில் அடங்கிவிட்டது. மேற்படி முடிவின்படி என்னுடைய ஆறாண்டுக் கல்விக் காலத்தில் எல்லா வகுப்புகளுக்கும் இருமுறை பாடத் திட்டங்களை, மாற்றி அமைத்தோம். பட்டப் படிப்பு, மேல் பட்டப் படிப்பு இவற்றுக்கு அரையாண்டுத் தேர்வு முறை கொண்டுவர வேண்டும் என்று ஒரு பிரிவினர் வாதிட்டனர். மற்றோர் பிரிவினர் ஆண்டுக்கு ஒரு தேர்வு நடத்துவது அதிகம் என்று வழக்காடினர். தேர்வுகளில் உள்மதிப்பீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்று ஆதிக்கம் பெற்ற சிலர் போராடினர். பெரும்பாலான மாணவர்கள் அதை எதிர்த்தனர். பல கல்லூரிகளில் மாணவர் கூட்டங்களில், உள் மதிப்பீட்டு முறை, பேராசிரியர்களின் விருப்பு வெறுப்புகள் விளையாட வழிவகுக்கும் என்று பேராசிரியர்களை வைத்துக் கொண்டே கூறினார்கள். நானும், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலோரும் இவை பற்றி முனைப்பு காட்டவில்லை. பேராசிரியர்களும் மாணவர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதையே முக்கியமாகக் கொண்டோம். மெல்ல விரைக’ எனும் கொள்கையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/716&oldid=788547" இலிருந்து மீள்விக்கப்பட்டது