பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர் கோரிக்கைகளைத் தீர்த்து வைத்தேன் - 703 அரசுக்குச் செய்தி அனுப்பினேன் நான் திடுதிப்பென வந்த மாணவர்களைச் சமாளித்ததோடு நிற்கவில்லை. பல்கலைக் கழகத்தின் இணைவேந்தர் ஆகிய டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு நேர்முகக் கடிதம் எழுதி, விவரமாக நடந்ததைத் தெரிவித்துவிட்டேன். ஆனால், அரசு என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறாமல் நின்றுவிட்டேன். இரண்டொரு நாள்களுக்குப் பிறகு இணைவேந்தரைக் கண்டேன். அவ்வமயம் முதல்வர் டாக்டர் கலைஞர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அவர் வந்த பிறகு கலந்தாலோசித்து முடிவு எடுப்பதாகக் கல்வி அமைச்சர் கூறினார். இலண்டனில் பேட்டி நான் பாரிசில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்குச் செல்லும் பேறு பெற்றேன். அம் மாநாட்டிற்கு முதல்வர் கலைஞர் வந்து கலந்து கொண்டார். எங்கள் பயனத்திட்டப்படி குறிப்பிட்ட ஒருநாள் முதல்வரும் நானும் இலண்டனில் இருக்க நேர்ந்தது. அன்று அவருடைய நேரம் கேட்டு, பேட்டி கண்டேன். சென்னையில் ஆங்கிலப் பயிற்சி மொழி கோரி மாணவர்கள் துரது வந்த நிகழ்ச்சி பற்றியும், கல்வி அமைச்சரின் கருத்து பற்றியும் தெரிவித்தேன். தாய்நாடு திரும்புவதற்கு முன் இச் சிக்கல் பற்றிச் சிந்தித்து முடிவு எடுக்கவேண்டினேன். __ வல்லுநர் குழுவின் பரிந்துரை முதலமைச்சர் தாய்நாடு திரும்பிய பிறகு, டாக்டர் லட்சுமணசாமி முதலியார், தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், நான் ஆகிய மூவர் கொண்ட குழு ஒன்றை அரசு நியமித்தது. மானாக்கர் கோரிக்கை பற்றிக் கருத்து கூறுமாறு கேட்டுக் கொண்டது. - அக்குழு முடிவு எடுப்பதற்குமுன் தெ. பொ. மீ. அவர்களின் பதவிக்காலம் முடிந்தது. அப் பதவிக்கு நியமிக்கப்பட்ட டாக்டர் மு. வரதராசனார் மேற்படி குழுவின் உறுப்பினரானார். “ஒவ்வோர் அரசு கலைக் கல்லூரியிலும் பாதிப் பிரிவுகள் ஆங்கிலப் பயிற்சி மொழியைக் கையாளவேண்டும்” என்று அக்குழு பரிந்துரைத்தது. அதை அரசு ஏற்றுக்கொண்டது. அதுவே இப்போது நடைமுறையில் இருக்கிறது. sil o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/722&oldid=788554" இலிருந்து மீள்விக்கப்பட்டது