பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7{}4 75. பெரியார் பிறந்தநாள் விழாப் பேச்சில் எழுப்பிய சலசலப்பு நள்ளிரவில் முதல்வர் தொலைபேசியில் அழைத்தார் 1969ஆம் ஆண்டு - செப்டம்பர்த்திங்கள் 19 ஆம் நாள் இரவு 11 மணிக்கு உறங்கிக் கொண்டிருந்த என்னை, என் மனைவி எழுப்பினாள் சட்டென்று விழித்துக்கொண்ட என்னிடம் “முதலமைச்சர் உங்களோடு உடனே பேச வேண்டுமாம்; தொலைபேசியில் காத்துக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னார். நான் தொலைபேசி அண்டை விரைந்தேன். தொடர்பு கொண்டேன். “வணக்கம் ஐயா” என்றேன். “நான் கருணாநிதி பேசுகிறேன்: இப்பொழுதுதான் கடற்கரைக் கூட்டத்திலிருந்து வீட்டிற்கு வந்தேன். உங்களிடம் ஒரு செய்தியின் உண்மை பற்றி விசாரித்தறிய இந்த அகாலத்தில் எழுப்பிவிட்டேன். விரிவாகப் பேசலாமா?” என்று முதலமைச்சர் என்னைக் கேட்டார். "தாராளமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள்” என்று பதில் கூறினேன். --- முதலமைச்சர் விரிவாகப் பேசினார். அதன் சாரம் வருமாறு : ராஜாஜியின் நம்பிக்கை 'இன்று மாலை கடற்கரையில் அரசியல் பொதுக்கூட்டம் நடந்தது. ராஜாஜியும், நானும், பிறரும் கலந்து கொண்டோம். ராஜாஜி மேடைக்கு வந்து அமர்ந்ததும் என்னைக் கேட்ட முதல் கேள்வி. இன்று செய்தித் தாள்களில் வெளியான செய்திகளைப் பார்த்தீர்களா?’ என்பதுதான். நான் அதற்குப் பதில் சொல்வதற்கு முன் அவரே என். டி. எஸ். அப்படிப் பேசக்கூடியவரல்ல. அளந்து பேசக்கூடியவர். எங்கோ திரிபு ஏற்பட்டிருக்கிறது. அதை அவரிடமே விசாரியுங்கள். என் மதிப்பீடு சரியாக இருந்தால் திருத்தம் எழுதி இந்து”வுக்கு அனுப்பிவிடச் சொல்லுங்கள்’ என்று இராஜாஜி கூறினார். அப்படித்தானா?” என்று முதலமைச்சர் என்னைக் கேட்டார். i. எப்படிப் பேசினேன்? எங்கே பேசினேன்? எப்படித் திரிபு வந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/723&oldid=788555" இலிருந்து மீள்விக்கப்பட்டது