உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gufuni tipËž Bneir signů Guš##o arguiu saugavuu 705 பெரியார் பிறந்த நாள் விழா 'செப்டம்பர் 17 ஆம் நாள் திருச்சியில் தந்தை பெரியாரின் 91ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக முற்பகல் சுயமரியாதைக் குடும்பங்களின் பாராட்டு நடந்தது. அதற்கு நான் தலைமை தாங்கினேன். -- நான் பொதுக்கல்வி இயக்குநராக இருந்த வரையில் பெரியாரைச் சென்று காணக்கூட விடாமல் பெரியாரே என்னைத் தடுத் து வைத்திருந்தார். அப்படித் தனியாகக் காணக்கூடாது என்று கண்டித்திருந்ததால், அவருடைய கூட்டங்களுக்கும் போகாமல் இருந்தேன். நான் துணைவேந்தரான பிறகு வந்த தமது முதல் பிறந்தநாள் விழாவிற்கே என்னை அழைக்கும்படி பெரியாரே குறிப்பு காட்டினார். எனவே 91 வயது பெரியாருக்கு - நுட்பமான அறுவை மருத்துவம் செய்து கொண்டு இருப்பவருக்கு - பிறந்த நாள் வணக்கம் செலுத்துவது என் கடமை என்று எண்ணினேன். அழைப்பினை ஏற்றுக் கொண்டேன். விழாவில் கலந்து கொண்டேன். டி. டி. வீரப்பா பேச்சு -- திருச்சி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் திரு. டி. டி. வீரப்பா வரவேற்புரை நிகழ்த்துகையில், “இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 நடுவர்கள் உள்ளனர். அதில் 14 பேர் பார்ப்பனர் அல்லாதார்கள். அதற்காகப் ப்ோராடிப் பாடுபட்டு வெற்றி கண்டவர் பெரியார். அந்த வெற்றிதான் அவருடைய ஆயுள் நீடிப்பதன் ரகசியம்” என்று கூறினார். என் தலைமை உரையில், நான் பெரியார் அதைவிடப் பெரிய அடிப்படையான சமுதாய மாற்றத்தைச் செய்திருப்பதைச் சுட்டிக் காட்டினேன் o என் உரை "திரு வீரப்பா சுட்டிக் காட்டியது உண்மை. அது சிறு உண்மை. முழு உண்மை என்ன? பெரியாரால் நடந்திருப்பது பெரிய சமுதாய மாற்றம். பெரியாரின் தொண்டுதான், எனக்குப் படிக்க வேண்டும் என்ற உணர்வையும் எல்லோரும் சமம் என்ற உணர்ச்சியையும் வளர்த்தது. அதனால்தான் மக்களுக்குப் பயன்படும் அலுவலராகப் பெயர் பெற்று வருகிறேன். “பெரியார் கொள்கை என்னை மாற்றியிராவிட்டால் நான் நெய்யாடிபாக்கம் திண்ணை ஒன்றில் உட்கார்ந்துகொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/724&oldid=788556" இலிருந்து மீள்விக்கப்பட்டது