பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7O6 நினைவு அலைகள் பெரும்பாலான மக்களை எனக்கு மட்டமானவர்களாகக் கருதும் போக்கில் இருந்திருப்பேன். என்னைப்போல் இலட்சக்கணக் கானவர்களைச் சமத்துவ உணர்வுக்கு இட்டுச் சென்றவர் பெரியார். அவருக்குத் துணைநின்று பாடுபட்டவர்களே இங்குக் கூடியிருக்கிறீர்கள். - - “உயர்நீதி மன்றத்தில் உள்ள 14 பார்ப்பனர் அல்லாத நீதிபதிகளில் ஒருவரைக்கூட பெரியாருக்கு நேரில் தெரியாது. அவர் முன் வந்து நின்றால் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. பழக்கமில்லாதவர்கள் பெரும்பதவி பெறுவது பற்றிப் பூரிப்படையும் பெரியார், அவர் இயக்கத்தைச் சேர்ந்த உங்கள் வீட்டுப் பிள்ளைகள் முறையாகப் படித்து, பட்டம் பெற்று, பதவி பெற்றால் மேலும் பூரிப்பார் அல்லவா? எனவே உங்கள் பிள்ளைகளை நெறிப்படுத்துங்கள். படியுங்கள்; படியுங்கள்; மேலும் படியுங்கள் எல்லோரும் தேர்ச்சி பெறும் நிலையை உருவாக்குங்கள். அதுவே பெரியார் பாடுபட்டுவரும் சமுதாய சமத்துவத்திற்கு நெடுஞ்சாலையாக அமையும்” என்று கல்வியின்பால் நாட்டத்தைத் திருப்ப முயன்றேன், என்று முதலமைச்சருக்கு விளக்கினேன். இந்துவுக்கு மறுப்புச் செய்தி. 'நீங்கள் சொன்னது புரிகிறது; உங்களுக்குத் தடையில்லை என்றால், செய்திக்கு மறுப்பு எழுதி அனுப்பிவிடுங்கள்” என்று கட்டளையிட்டார். "அப்படியே செய்கிறேன்; தாங்கள் தயவுசெய்து மூதறிஞர் ராஜாஜிக்குச் சொல்லிவிடுங்கள். மற்றொரு சிறு உதவி வேண்டும். என் மறுப்புச் செய்தியை நாளைப் பிற்பகலுக்குள் தங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். அதைப் பார்த்து தாங்கள் ஒப்புதல் கொடுத்த பிறகு இந்துவுக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று கூறினேன். == “எனக்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டுமா? நீங்களே அனுப்பிவிட்டாலும் சரிதான்” என்றார் முதலமைச்சர். நான் முதலமைச்சர் முன்கூட்டியே பார்த்துவிட வேண்டும் என்று மீண்டும் வேண்டிக் கொண்டேன்; அவரும் இசைந்தார். கி. பாலசுப்பிரமணிய அய்யரும் கேட்டுக் கொண்டார் அடுத்த நாள் காலை, முதல் வேலையாகச் செய்திக்கு மறுப்பு எழுதுவதைக் கவனித்தேன். அதை எழுதிக் கொண்டிருக்கை யிலேயே, சென்னைப் பல்கலைக் கழக அட்சிக் குழுவின் மூத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/725&oldid=788557" இலிருந்து மீள்விக்கப்பட்டது