பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9ìuífliuirii 15]:mjö:» :br6ir 6úlyirù Guēšlà) srqgùùliu ęsw=avùl ! —o உறுப்பினர்களில் ஒருவரும், சட்டமன்ற மேலவை உறுப்பினருமான மாண்புமிகு கி.பாலசுப்பிரமணிய அய்யர் என்னோடு தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டார். மேற்படி செய்தியைப் பற்றிக் குறிப்பிட்டார். அது திரிபாக இருக்க வேண்டும் என்று ராஜாஜி போல அவரும் மதிப்பீடு செய்தார். நான் நடந்ததை விவரமாகச் சொன்னேன். திரு. அய்யர் மறுப்பு எழுதி அனுப்பும்படி ஆலோசனை கூறினார். மேற்குறித்த மறுப்பை எழுதி மாண்புமிகு முதலமைச்சருக்கு அனுப்பினேன். பேசினதைப் பேசியபடியே நினைவுபடுத்தி எழுதினேன். முதல்வர் திருத்தம் ஏதும் செய்யவில்லை. அப்படியே அனுப்பச் சொன்னார். அதன் படியெடுத்து இந்து வுக்கு அனுப்பிவிட்டேன். பெரியார் அனுப்பிய நோட்டீசு இதற்கிடையில், துறையூர் வழக்கறிஞர் திரு. ரங்கசாமி ரெட்டியார் அவர்களைக் கொண்டு, தந்தை பெரியார் இந்து’வின் பேரில் அத்தவறான செய்திக்காக வழக்குத் தொடரப் போவதாக *பதிவு அஞ்சலில் அறிவிப்பு அனுப்பியிருந்தார். சிலநாள்களில் எனது மறுப்புச் செய்தி 'இந்து'வில் வெளியிடப்பட்டது. அப்படி வெளியிடுகையில், “இம் மறுப்பை நமது திருச்சி நிருபருக்கு அனுப்பினோம். அவர் செய்தி உண்மை என்கிறார். இருப்பினும் இவ்விவகாரம் இதோடு முடிந்தது” என்ற ஆசிரியர் குறிப்போடு 'இந்து' நாளிதழ் வெளியிட்டது. அதைக் கண்டு பெரியார் சினம் கொண்டதாக அடுத்த பேட்டியின்போது கூறினார். + . எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ்" நிருபர் உண்மையை உணர்த்தினார். ஆனால், அப்படி ஒரு செய்தி இந்தியன் எக்ஸ்பிரசுக்குத் திருச்சியிலிருந்து வரவில்லை. எனவே சென்னை அலுவலகத்திலிருந்து திருச்சி நிருபர் திருகோபாலனோடு தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கெர்ண்டார்கள். “நெ. து. சு. வின் பேச்சு பற்றி ஏன் எச் செய்தியும் அனுப்பவில்லை” என்று கேட்டார்கள். - அதற்குத் திரு. கோபாலன் கொடுத்த பதில் வருமாறு = “குறிப்பிட்ட நாளன்று லால்குடியில் விவசாய மகாநாடு' நடந்தது. ஆறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். எனவே, நாள் முழுதும் எல்லா நிருபர்களும் அங்கேயே இருந்தோம். பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சி எதற்கும் எந்த நிருபரும் போகவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/726&oldid=788558" இலிருந்து மீள்விக்கப்பட்டது