பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

709 76. பிலிப்பைன்ஸ் அழைத்தது மணிலா நகரத்தின் 400வது ஆண்டு விழா நான் துணைவேந்தர் பதவி ஏற்றுக் கொண்ட இரண்டொரு திங்களில், வெளிநாட்டு அழைப்பு ஒன்று வந்தது. எந்த நாட்டிலிருந்து? பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து. எதற்காக அழைத்தார்கள்? 'பிலிப்பைன்ஸ் நாட்டின் பெருந்துறைமுகமான மணிலா நகரம் அமைக்கப்பட்டு, நானுறு ஆண்டுகள் நிறையப் போகின்றன. எனவே, மணிலா நகரம் நிறைவு விழாவைப் பலவகையிலும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. மணிலாவின் பன்னாட்டுப் பல்கலைக் கழகக் கூட்டம் ஒன்றைக் கூட்டுவது, விழாவின் ஒருகூறாகும். அவ் விழாவுக்குச் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகிய தங்களை அன்போடு அழைக்கிறோம். - இப்படிக் கூறிற்று அந்த அழைப்பு. பல்கலைக் கழகத்தில் பல பணிகள் இருந்ததால், வரமுடியாது என்று நானாகவே பதில் எழுதிவிட்டேன். அவர்கள் அதோடு நிற்கவில்லை. மீண்டும் ஒரு கடிதம் எழுதி வற்புறுத்தினார்கள். அம்முறை அவ்வழைப்பை ஆட்சிக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். ஆட்சிக் குழு, நான் போய்வர வேண்டுமென்று ஆர்வத்தோடு முடிவு செய்தது. அக் கட்டளையை ஏற்று, மண்ணிலாவுக்குச் சென்றேன். கூட்டத்தில் கலந்துகொண்டேன். மாணவர்கள் ஆர்ப்பாட்டம் சில பல்கலைக் கழகங்களையும், கல்லூரிகளையும் அந் நாட்டில் தொழில் அடிப்படையில் நடத்தி, ஆதாய்ம் தேடுகிறார்களாம். மாநாட்டு வாயிலில் சில மாணவர்கள் அந் நிலையைக் கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். சலசலப்புக்கு மேல் போகவில்லை என்பது மகிழ்ச்சிக்கு உரியது. மாநாடு தொடங்கிய அன்று, மணிலா மேயர் நாளிதழ் களுக்குக் கொடுத்த பேட்டியில் “பல்கலைக் கழக மாநாட்டுக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் மணிலா நகர காவல்துறை தக்க பாதுகாப்பு அளிக்கும்” என்பதைப் பெரிதுபடுத்தியிருந்தார். அதேபோல் நாங்கள் ஹோட்டல்களிலிருந்து, மாநாட்டுக் கூடத்திற்குச் சென்றாலும், அங்கிருந்து திரும்பினாலும், வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/728&oldid=788560" இலிருந்து மீள்விக்கப்பட்டது