பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710 நினைவு அலைகள் சுற்றுலா சென்றாலும், நாங்கள் சென்ற பேருந்துகளுக்கு முன்னும், பின்னும் வாகனங்களில் காவல்துறையினர் பாதுகாத்து வந்தனர். இயற்கை வளம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நெல், கரும்பு, வாழை, ஆகியவை பரவலாகப் பயிரிடப்படுகின்றன. தென்னை மரங்கள் ஏராளம். இளநீர்க் குலைகள் நெடுஞ்சாலையில் பல இடங்களில் விற்பனைக்குத் தொங்கவிடப்பட்டுள்ளதைக் கானலாம். நாம் வேர்க்கடலை என்று அழைக்கிற மணிலாக் கொட்டை மூலைக்கு முலை முழுக் கொட்டையாக விற்பனையாகிறது. கூடைக் கொட்டைகளை மொத்தமாகக் கொட்டி வைக்காமல், கொட்டை களை அடுக்கி, கோபுரம் கட்டியதுபோல் அழகுபட அமைத்து வைத்திருக்கக் கண்டோம். "புட்டு வந்த வரலாறு * மாநாட்டுக்கு முன்னால் எண்பது கிலோ மீட்டர் துரத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் ஆண்டு விழாவுக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். வழியில் ஒரு சிற்றுண்டிச் சாலையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. எங்களோடு வந்தவர்களில் அந்நாட்டவர் ஒருவர், சென்னைக்கு வந்து பல்கலைக் கழகத்தில் டாக்டர் ராகவனிடம் வடமொழி பயின்றார். அவர் எனக்குப் பேச்சுத் துணையாக இருந்தார். o சிற்றுண்டிச் சாலைக்குள் நுழைந்ததும், “வேலு, நீங்கள் புட்டு சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டார். கேள்வி புரியாமல் திகைத்தேன். 'தமிழ்நாட்டில் சாதாரணமக்கள் உண்ணும் புட்டு என்னும் தின்பண்டத்தைக் குறிக்கிறேன்” என்றார். இருவரும் அதை உண்ண ஒப்புக் கொண்டோம். உண்டும் பார்த்தோம். செவ்வரிசி மாவும், தேங்காய்த் துருவலும், வெல்லமும் கலந்த அத் தின்பண்டம், நம்மூர்த் தின்பண்டமாகவே இருந்தது. ‘விரும்பி உண்னும் உணவுப் பண்டங்களில் ஒன்றாக அது இருக்கிறது” என்று நண்பர் கூறினார். அது வந்த விவரத்தையும் விளக்கினார். "ராஜராஜசோழனின் படை கிழக்கு இந்தியத் தீவுகளின்மீது படை எடுத்தபோது, இவ்வுணவு வகையும் அப்பகுதிக்குப் பரவிற்று. பின்னர் அத் தீவுகளிலிருந்து பல்லாயிரவர் பிலிப்பைன்ஸ் நாட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/729&oldid=788561" இலிருந்து மீள்விக்கப்பட்டது