உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிசு தமிழ் மாநாட்டுக்குச் சென்றேன். o 711 குடியேறியபோது, அவர்கள் இவ் வுணவை இங்கே பரப்பினார்கள்” என்றார் அந்த ஆராய்ச்சியாளர். அன்பளிப்பு மணிலா மாநாட்டிற்கு வந்திருந்த வெளிநாட்டவர் ஒவ்வொருவருக்கும் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா என்ற ஆங்கிலக் கலைக் களஞ்சியத் தொகுப்பை, அன்பளிப்பாக வழங்கினார்கள். தங்கள் செலவில் அந்த அந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்கள். மேலும், “இது பல்கலைக் கழகத்துக்கு அன்பளிப்பு அல்ல; துணைவேந்தர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அன்பளிப்பு. இதை நீங்களே வைத்துக் கொள்ளலாம்” என்று எழுத்து வாயிலாக அறிவித்தார்கள். 77. பாரிசு தமிழ் மாநாட்டுக்குச் சென்றேன் நான் சென்னைக்குத் திரும்பிய ஒரு திங்களுக்குப் பிறகு கலைக் களஞ்சியத் தொகுப்பு பத்திரமாக வந்து சேர்ந்தது. அதை நான் எனக்காக வைத்துக்கொள்ளவில்லை. சென்னைப் பல்கலைக் கழக நூல்கத்திற்கு வழங்கிவிட்டேன். அத் தகவலை ஆட்சிக் குழுவுக்கும் தெரிவித்துவிட்டேன். பாரிசு மாநாட்டுக்கு மு. வ.வை அனுப்பினேன் நான் மணிலா போய் வந்தபிறகு, அரசிடமிருந்து பல்கலைக் கழகத்துக்கு ஒரு கடிதம் வந்தது. அது எது பற்றி? 1970ஆம் ஆண்டு ஜூன் திங்கள் பாரிசு மாநகரில் நடந்த மூன்றாவது உலகத்தமிழ் மாநாடு பற்றியது அக் கடிதம், அம் மாநாட்டிற்குப் பல்கலைக் கழகச் சார்பில் ஒருவரை, பல்கலைக் கழகச் செலவில் அனுப்பி வைக்கும்படி அக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அதைப் பார்த்ததும் அப்போதைய தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனாரை அனுப்புவதே பொருத்தம் u என்று நொடியில் முடிவு செய்தேன். அக் கடிதத்தை அலுவலகத் துக்கு அனுப்பாமல் என் பாதுகாப்பில் வைத்திருந்தேன். o பல்கலைக் கழக ஆட்சிக்குழு, திங்கள்தோறும் கூடும். அதன் நிகழ்ச்சி நிரலும், குறிப்புகளும் முன்கூட்டியே அனுப்பப்படும். இருப்பினும் சிலவற்றை முன்கூட்டித் தெரிவிக்காமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/730&oldid=788563" இலிருந்து மீள்விக்கப்பட்டது