பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712 நினைவு அலைகள் 'துணைவேந்தர் கொண்டுவரும் விஷயங்கள்’ என்ற தலைப்பில் கூட்டத்தின் போதுதான் குழுவின்முன் வைப்பதும் உண்டு. பாரிசு மாநாடு பற்றிய அழைப்பைத் துணைவேந்தர் கொண்டு வரும் பட்டியலில் சேர்த்து வைத்திருந்தேன். குழு, கூடியபோது உரிய நேரத்தில் அவ்வழைப்பினைச் சொல்லி, “தமிழ்த் துறைப் பேராசிரியர் டாக்டர் மு. வ. அவர்களை அனுப்பி வைக்கலாம்” என்று கூறினேன். ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அதற்குத் தடை சொல்லவில்லை. ஆனால், திருத்தம் சொன்னார்கள். அம் மாநாட்டிற்குத் தமிழ் அறிந்த துணைவேந்தரே போகவேண்டும் என்று பெரும்பான்மை யான உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள். நான் சபலத்துக்கு ஆளாகவில்லை. தமிழ்ப் பேராசிரியர்தான் போக வேண்டும் என்று உறுதியாகக் கூறிவிட்டேன். அப்புறம் என் குறிப்பை ஏற்றுக் கொண்டார்கள். அன்பழகன் உதவினார் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த பேராசிரியர் அன்பழகன் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பின ராக இருந்தார். பல்கலைக் கழகத்துக்கு நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். அவர் குறுக்கிட்டு, 'துணைவேந்தர் ஆலோசனையை ஏற்றுக் கொள்வோம். ஒரே ஒரு வேண்டுகோள். அரசு செலவில் துணைவேந்தரை அழைத்தால், அதையாவது ஏற்றுக்கொண்டு மாநாட்டில் கலந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். அதைப் பேச்சுவாக்கில் வந்த அன்புணர்ச்சி என்று கருதிவிட்டேன். சில வாரங்கள் சென்றன. தமிழ்நாடு அரசு அதன் செலவில் பாரிசு ஆட்சிக் குழுவில் சொல்லியதை, மறந்துவிடாமல் அரசிடம் சொல்லி ஏற்பாடு செய்திருக்கிறாரே, என்று பூரித்துப் போனேன். பாரதியும் கல்வியும் அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டு பாரிசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டேன். மாநாட்டில் 'பாரதியும் கல்வியும்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை படிக்கும் வாய்ப்புப் பெற்றேன். சிலம்புச் செல்வரோடு சில நாள்கள் மாநாட்டின் போது, மாநாடு நடந்த கல்லூரிக்கு அருகில் ஒரு ஒட்டலில் சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானமும் நானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/731&oldid=788564" இலிருந்து மீள்விக்கப்பட்டது