பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

714 நினைவு அலைகள் மேற்படாமல் கட்டணத்திற்காக ஈடுபணம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு கல்லூரி மட்டும் அரசு ஆணை வருவதற்கு முன்பே, கட்டணத்தை 90 ரூபாயாக அறிவித்து மாணவிகளை அந்த அடிப்படையில் சேர்த்தது. எனவே அக் கல்லூரி 90 ரூபாய் வீதத்தில் 'ஈடுபணம்’ கோரியது. அப்படிக் கொடுக்காவிட்டால் அரசு எவ்வளவு கொடுக்கிறதோ, அவ்வளவு தொகையை மட்டும் மாணவிகளுக்குத் திருப்பிக் கொடுப்பதாக, அறிவித்தது. அக் கல்லூரிக்கும், அரசுக்கும், இதுபற்றிக் கடிதப் போக்குவரத்து நடந்ததில் பல மாதங்கள் ஒடிவிட்டன. பல்கலைக் கழகப் புகுமுகத் தேர்வுக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. அப்போது அக் கல்லூரி நிர்வாகம் மாணவிகள் அனைவரும் ஏற்கெனவே இரு பருவங்களுக்கு 90 ரூபாய் விழுக்காட்டில் செலுத்தியதுபோல, மூன்றாம் பருவத்துக்கும் 90 ரூபாய் கட்ட வேண்டும். அப்படிக் கட்டினால்தான் தேர்வுக் கட்டணத்தை வாங்கிப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்ப முடியும் என்று அறிவித்துவிட்டார்கள். அதனால் பெற்றோர்களிடம் பதற்றம் ஏற்பட்டது. செய்தித் தாள்களில் சூடான ஆசிரியர் கடிதங்கள் வந்தன. கல்விச் செயலாளரின் கடிதம் இந்நிலையில் திங்கள்தோறும் நடக்கும் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் கூட்டம் வந்தது. அக் கூட்டம் தொடங்குவதற்கு இரு மணித்துளிகளுக்கு முன்பு கல்லூரிக் கல்வி இயக்குநர் கல்வித் துறைச் செயலரிடமிருந்து எனக்கு ஒரு நேர்முகக் கடிதத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். அதைத் திறந்து பார்த்தேன். மேற்படி கல்லூரியின் அறிவிப்பு எழுப்பியிருக்கும் சலசலப்பை என் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும், அத் தகராறில் பல்கலைக் கழகம் தலையிட்டு, தன் அதிகாரத்தைச் செலுத்தி, தகுதி படைத்த மாணவிகளின் தேர்வுக் கட்டணத்தை வாங்கி அனுப்பும் படி கட்டளையிடும்படியாக வேண்டுகோள் அக் கடிதத்தில் இருந்தது. விதிமுறைகளின்படி பல்கலைக் கழகம் ஒரு கல்லூரியை நடத்த உரிமை கொடுக்கும்போது என்னென்ன கட்டடங்கள் தேவை? எவ்வளவு பரப்பில் இருக்க வேண்டும்? எவ்வளவு விளையாடும் இடம் தேவை? தளவாடங்கள் எவை எவை? எத்தனை வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/733&oldid=788566" இலிருந்து மீள்விக்கப்பட்டது