பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரி நடைமுறைகளில் பல்கலைக்கழகம் தலையிட முடியுமா? 715 Th நூலகம் எப்படியிருக்க வேண்டும்?’ என்று விவரமாகச் சொல்வதோடு, ஆசிரியர்களின் தகுதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை, அவர்களுடைய ஊதிய விகிதம், பணிப்பாதுகாப்பு ஆகியவை பற்றிப் பல்கலைக் கழகம் ஆணையிடும். மாணவ மாணவியரிடம் வாங்கும் சம்பளம் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. சம்பளத்தைப் பற்றிய விதியை உரிமத்தில் சேர்க்காதபோது, அது பற்றிய தகராறில் பல்கலைக் கழகம் தலையிடும் அதிகாரம் ஏது?’ என்ற கேள்வி என்னுள் மின்னியது. ஆட்சிக் குழுவின் ஆலோசனை ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கல்விச் செயலாளரிடமிருந்து வந்த நேர்முகக் கடிதத்தைப் படித்துக் காட்டினேன். உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டேன். நான் வேண்டிக் கொண்டபடி ஒவ்வொருவரும் தன் கருத்தைத் தெரிவித்தனர். பொறுமையாகக் கேட்டேன். எதிரும் புதிருமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. “பல்கலைக் கழகம் அக் கல்லூரியை நடத்த உரிமை கொடுத்த போது எவ்வளவு சம்பளம் வாங்கலாம் என்பதைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. சம்பள விகிதம் கல்வி இயக்ககத்துக்கும், தனியார் கல்லூரிக்கும் இடையில் உள்ள விவகாரம்.அவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டியதை, பல்கலைக் கழகம் ஒர் ஆணையின் மூலம் தீர்க்க முடியாது. பல்கலைக் கழகம் இதில் தலையிடுவது சட்டத்துக்குப் புறம்பானது” இப்படிச் சொன்னவர்கள் பலர் 'பல்கலைக் கழகம் தலையிட அதன் சட்டம் இடம் கொடுக்குமா?’ என்பது கேள்விக்குறி. பல்கலைக் கழகத்தின் சட்ட ஆலோசகரை உடனே கலந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுங்கள். சட்டம் எப்படியிருந்தாலும் பலநூறு மாணவிகளின் படிப்பையும், எதிர்காலத்தையும் பாதிக்காதவாறு எப்படிப் பாதுகாப்புத் தரலாம் என்று சிந்தித்து நடவடிக்கை எடுங்கள். இந் நெருக்கடியில் பல்கலைக் கழகம் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், நழுவிவிட்டால் பொதுமக்கள் நம்மை மன்னிக்கமாட்டார்கள். 700, 800 பெண்களின் சாபத்தை நாம்தான் ஏற்க வேண்டும். எனவே ஏதாவது செய்து அவர்களைக் காப்பாற்றுங்கள்.” - இப்படிச் சொன்னவர்கள் சிலர். வாழ்க்கையில் நேரிடும் சில நெருக்கடிகளைப் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற அடிப்படையில் முடிவு செய்யக்கூடாது. இதை மனத்தில் வைத்துக் கொண்டு இறுதியில் என் கருத்தைத் தெரிவித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/734&oldid=788567" இலிருந்து மீள்விக்கப்பட்டது