உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== 'க ாமராசர் மாணவர்களை நெறிப்படுத்தினார் 719 அதன்படி திரு. அய்யங்காரைக் கூப்பிட்டு அவர் வாயிலாக அரசின் வாக்குறுதியைத் தெரியப்படுத்தினேன்; கல்லூரி நிர்வாகம் ஒத்துழைத்தது. மாணவியர் தேர்வுக் கட்டணம் செலுத்த அனுமதித்தது. அதை வாங்கிச் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி வைத்தது. இதற்கிடையில் மறுநாளே முன்பணம் கொடுக்கும் -շտ»-ապւն பிறப்பிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட எல்லாப் பிரிவினர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. 79. காமராசர் மாணவர்களை நெறிப்படுத்தினார் காமராசருடன் பேசினேன் 1969இல் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி இப்போது விவரிக்கிறேன். --- 1969ஆம் ஆண்டு இறுதியில் புதுதில்லியில் பல்கலைக் கழக மான்யக்குழு கூட்டிய ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். கூட்டம் முடிந்தபின் காலை வான ஊர்தியில் சென்னை திரும்பினேன். விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது பெருந்தலைவர் காமராசர் பல பெரியவர்கள் சூழ, அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் எழுந்து நின்று வணங்கினேன். அவர் என்னை நோக்கி வந்து, “சென்னைக்குத் தானே வருகிறீர்கள்?’ என்று கேட்டார். “ஆம்” என்று நான் பதில் கூறவும், அவர், “விமானத்தில் பேசுவோம்” என்று சொல்லிவிட்டு நண்பர்களோடு வேறுபக்கம் சென்றுவிட்டார். உரிய நேரத்தில் வானஊர்தியில் ஏறி அமர்ந்தோம். அது விண்ணில் ஏறிப் பறந்தது. முன்வரிசையில் பெருந்தலைவர் அமர்ந்திருந்தார். திரு.மோகன் குமாரமங்கலமும் அவ் வரிசையில் இருந்தார். வானஊர்தி புறப்பட்டுப் பத்துமணித் துளிகளான பிறகு காமராஜர் தம் இருக்கையை விட்டு எழுந்து பின்பக்கமாக நடந்து வந்தார். 14வது வரிசையில் இருந்த என்னைத் தேடி வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் விமான நிலையத்தில் கூறியதை வெறும் உபச்சார மொழியாகக் கருதிவிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/738&oldid=788571" இலிருந்து மீள்விக்கப்பட்டது