உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720 நினைவு அலைகள் , o காமராஜர் என்னருகில் வந்ததும், “என்ன கூட்டத்திற்கு வந்தீர்கள்?’ என்று கேட்டபடியே எனக்கு அடுத்துக் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டார். நான் பதறிப் போனேன். “தாங்கள் சொல்லி அனுப்பியிருந்தால் தாங்கள் இருக்கும் இடம் தேடி, நானே வந்திருப்பேன். ஐயாவை, வரவிட்டிருக்க மாட்டேன்” என்று நான் கூறினேன். 'இருந்தால் என்ன? எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வேலையில் உரிமையோடு செயல்பட விடுகிறார்களா? தலையீடு உண்டா?” என்று பெருந்தலைவர் கேட்டார். "ஐயா, என் அலுவலில் தலையிடுவதில்லை. தங்கள் காலத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அப்படியே செயல்படுகிறேன்” என்று பதில் கூறினேன். H. : நான் ஏதாவது செய்ய வேண்டுமா?” என்று பெருந்தலைவர் வினாவினார். நொடியில் அறிஞர் அண்ணாவின் விருப்பம் நினைவிற்கு வந்தது. எனவே, "ஐயா, ஒரு உதவி தேவை; அது எனக்காகத் தனிப்பட்ட முறையில் அல்ல. பொதுநன்மையைக் கருதியே ஒரு உதவி தேவைப்படுகிறது. அதைக் கேட்பதற்குக் கூச்சப்பட்டுப் பல நாள்களாகக் காத்திருக்கிறேன். இங்கே கேட்பதற்காக மன்னியுங்கள்” என்றேன். “சும்மா சொல்லுங்கள். இவ்வளவு நிம்மதியாகப் பேசுவதற்கு மீண்டும் எப்போது வாய்ப்புக்கிட்டும் என்று சொல்ல முடியாது!” என்று பெருந்தலைவர் கூறினார். மாணவர்க்கு ஊர் விவகாரம் வேண்டாம் "ஐயா, தாங்கள் சோறு போட்டுச் சீருடை தந்து கல்வியை இலவசமாக்கி வளர்ந்த பிள்ளைகள், முதல் தலைமுறை படிப்பாளிகள், அவர்கள் இப்போதுதான் கல்லூரிகளுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் படிப்பையும், பொது விவகாரங்களையும் ஒரே நேரத்தில் சமாளிக்கப் பழக்கப் பட்டவர்கள் அல்லர். எனவே அவர்களுடைய பொது விவகார ஈடுபாடு, அவர்களது படிப்பைக் கெடுக்கும் ஆபத்துள்ளது. தங்கள் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட இளைஞர்களைப் பொது விவகாரங்களிலிருந்து விலக்கிக் கல்வியின்பால் முழு அக்கறை செலுத்தும்படி செய்துவிட்டால் தமிழ்நாட்டின் நிலையே மாறிவிடும்; ஏழை பாழைகள் எல்லாம் நல்ல தேர்ச்சி பெற்று விடுவார்கள். தயவுசெய்து அவர்களை நெறிப்படுத்தும் உதவியைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/739&oldid=788572" இலிருந்து மீள்விக்கப்பட்டது