உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராசர் மாணவர்களை நெறிப்படுத்தினார் 721 செய்ய வேண்டுகிறேன்” என்று பணிவோடு பெருந்தலைவரைக் கேட்டுக் கொண்டேன். “அதற்கென்ன, அப்படியே செய்கிறேன். பையன்கள் படித்து முன்னுக்கு வரட்டும்” என்று எவ்விதத் தயக்கமும் இல்லாமல் பெருந்தலைவர் உரைத்தார். பிறகு சில மணித்துளிகள் பொதுவாகப் பேசிக் கொண்டி ருந்துவிட்டு தம் இருக்கைக்குத் திரும்பினார். சென்னையில் இறங்கியதும் என்னைப் பார்த்து, “கவனிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டார். காமராசர் கட்டளை அடுத்த நாள் காலை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னை நண்பர் எம். பி. தாமோதரன் தொலை பேசியில் கூப்பிட்டார். விவரமாகப் பேசினார். அதன் சுருக்கம் வருமாறு. “நான் இப்பொழுது பெருந்தலைவர் வீட்டிலிருந்துதான் பேசுகிறேன். அவர் காங்கிரஸ் கட்சி மாணவர் தலைவர்களை அழைத்துப் பேசினார். அவர்களிடம், நெ. து. சுவை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவர் ஒரு குழந்தை. சென்று பேட்டி கேட்டாலும், மறுக்காமல் கொடுப்பார். அக் குழந்தை சொல்வதையும் பொறுமையாகக் கேட்பார். அக் குழந்தையின் வேண்டுகோளையும் புறக்கணிக்காமல் சிந்தித்துப் பார்த்து சரி என்று பட்டால் ஏற்றுக் கொள்வார். மாறாக எவ்வளவு பெரியவர்கள் சொன்னாலும், எத்தனை பேர் கூடி மிரட்டினாலும் அவர் மனத்திற்குச் சரி என்று படாததைச் செய்யவே மாட்டார். ஆதலால் நெ. து. சு. துணைவேந்தராக இருக்குமட்டும், என்ன கோரிக்கை எழுந்தாலும் கூட்டம் திரட்டிக் கொண்டு போக வேண்டாம். இரண்டொருவர் மட்டும் போய் அவர் காதில் போட்டுவிட்டு வாருங்கள்’ என்று கட்டளையிட்டுவிட்டார். எனவே எங்கள் கட்சி மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு ஊர்வலமாக வந்து தொல்லை கொடுக்கமாட்டார்கள். இச் செய்தியை நான் தங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று பெருந்தலைவர் கட்டளையிட்டதால் தொலைபேசியில் கூப்பிட்டுச் சொல்கிறேன். அதற்காக என்னை மன்னியுங்கள்.” - இப்படி நண்பர் தாமோதரன் உரைத்தார். m அக் கட்டளை ஒப்புக்கு இட்டதல்ல. உண்மையில் செயல்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/740&oldid=788574" இலிருந்து மீள்விக்கப்பட்டது