பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722 80. துணைவேந்தரை உரிமையோடு செயல்பட விடுங்கள் 'காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தது’ என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு ஒப்ப ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்தது. அப்போது தமிழ்நாட்டில் ஒரே ஒரு சட்டக் கல்லூரி தானிருந்தது. சட்டப் படிப்பின் இறுதியில் நடக்கும் தேர்வுகளில் வெற்றிபெற எவ்வளவு மதிப்பெண் வேண்டுமென்பதைச் சென்னைப் பல்கலைக் கழகம் முடிவு செய்ய வேண்டும். டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் ஒய்வு பெறச் சில திங்கள் இருக்கையில், அது பற்றிய முடிவொன்று எடுக்கப்பட்டது. பல்கலைக் கழகத்தின் சட்டப் படிப்புக் குழுவின் பரிந்துரை களின்படி அம் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. அனைத்து இந்திய பார்க்கவுன்சில்” என்னும் வழக்கறிஞர் குழு, சட்டப் படிப்பு பற்றி, நெறிகள் காட்டுவது மரபு. அப்படி அப்போது காட்டிய நெறிக்கும், சென்னைப் பல்கலைக் கழக விதிக்கும் சிறு மாறுபாடு இருந்தது. வழக்கறிஞர் குழு ஆலோசனை கூறியிருந்த மதிப்பெண்களைவிட, ஐந்து மதிப்பெண்கள் கூடுதலாக - அதுவும் ஒரே ஒரு பாடத்தில் தேவை என்று பல்கலைக் கழகம் விதித்திருந்தது. அதுபற்றிச் சட்டக் கல்லூரி மாணவர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். அடையாள வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மற்ற எல்லாப் பல்கலைக் கழகங்களும் வழக்கறிஞர் குழுவின் பரிந்துரைப்படியே மதிப்பெண்கள் விதித்திருப்பதைப்போல் சென்னைப் பல்கலைக் கழகமும் விதிக்க வேண்டும் என்று கோரினர். அக் கோரிக்கை பல்கலைக் கழகத்தின் சட்டப் படிப்புக் குழுவின் மறு பரிசீலனைக்கு வந்தது. அக் குழு முன்முடிவை மாற்றிக்கொள்ள மறுத்தது. அந்த இக்கட்டான நிலையில் நான் பொறுப்பிற்கு வந்தேன். மாணவர்களின் ஊர்வலத்தைக் கண்டேன். பொறுமையாக அவர்களுக்குச் செவி சாய்த்தேன். அவர்கள் கோரிக்கையை மீண்டும் பரிசீலனைக்கு வைப்பதாகக் கூறினேன். பாடக் குழுவின் தலைவர் இயல்பாகவே ஒய்வுபெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அதுவரை பொறுத்திருந்தேன். பின்னர் அக் குழுவின் ஆலோசனைக்கு அனுப்பினேன். புதிய் தலைவர் பிடிவாதம் காட்டவில்லை. வழக்கறிஞர் குழுவின் எதிர்பார்ப்புக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/741&oldid=788575" இலிருந்து மீள்விக்கப்பட்டது