பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தலை உரிமையோடு செயல்பட விடுங்கள் 723 அதிகமாக மதிப்பெண் கேட்க வேண்டாம் என்று அவர் வழிகாட்டினார். புதியவர் சொல்லியதைக் குழு ஏற்றுக் கொண்டது. ஒரு நெருக்கடி தீர்ந்தது என்று ஒரளவு மன நிறைவு கொண்டேன். அவ்வேளை சில சட்டக் கல்லூரி மாணவர்கள் வந்தனர். ஒரு கோரிக்கையைத் தெரிவித்தனர். “முன்னர் கோரியபடி மதிப்பு எண்களை மாற்றுவதாகக் கேள்விப்படுகிறோம். தயவுசெய்து இரண்டு, மூன்று நாளைக்கு அதை அறிவிக்காதீர்கள். இப்போது அறிவித்தீர்கள் என்றால், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியார் நல்ல பெயர் வாங்கி விடுவார்கள். இரண்டொரு நாளில் நாங்கள் ஊர்வலமாக வந்து, அதே கோரிக்கையை கொடுக்கிறோம். அப்புறம் மதிப்பு எண் குறைப்பைப் பற்றி அறிவித்தால் எங்கள் கட்சி மாணவர் அணிக்குப் புகழ் ஓங்கும். எனவே இரண்டுநாள் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டினார்கள். ஏற்கெனவே பட்டதாரிகளாகிய அம் மாணவர்கள். அணுகுமுறை விபரீதமாகத் தோன்றிற்று. பல்வேறு பிரிவுகளுக்குள் உள்ள செல்வாக்குப் போட்டி, நாட்டை அழிப்பதுபோல் பல்கலைக் கழகத்தையும் அலைக்கழிக்கிறது என்பது எனக்குப் புலப்பட்டது. எனவே வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்று பதில் கூறாமல், அமைதிப்படுத்தி அனுப்பினேன். எப்படியோ அவர்களும் கட்டுப்பட்டு அமைதியாகச் சென்றார்கள். அப்படி வரும் மாணவர்களில் சிலர் ஏற்கெனவே பள்ளிக்கூட விழாக் களிலோ, பகல் உணவு வழங்கும் விழாவிலோ என்னைக் கண்டவர்கள். அம் முகதாட்சண்யம் என்னிடம் கோபம் கொள்ளவிடவில்லை. துணைவேந்தர்களுக்கு ஆதரவு தர வேண்டும் தன்னாட்சி இந்தியாவில் துணைவேந்தர்களும், பல்கலைக் கழகங்களும் வெவ்வேறு மாணவர் அணிகளின் போட்டிச் சூழலில் சிக்கிப்படும் அல்லல் கொஞ்சம் அல்ல. உரலுக்கு ஒரு பக்கம் இடி: மத்தளத்துக்கு இரு பக்கம் இடி’ என்பது பழமொழி. துணை வேந்தர்களுக்கோ பல பக்கத்திலும் நெருக்கடி துணைவேந்தர்களின் அன்றாட அலுவல்களில் பெரியவர்கள் தலையிடுவது விரைந்து பரவி வரும் இந்திய நோயாகும். துணைவேந்தர்களுக்குச் சமுதாயமும், பெரியவர்களும் இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/742&oldid=788576" இலிருந்து மீள்விக்கப்பட்டது