உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

724 நினைவு அலைகள் கொடுப்பதைக்காட்டிலும், அதிகப்படியான ஆதரவைக் கொடுப்ப தோடு செயல்படும் உரிமையை வழங்கினால்தான் இந்தியப் பல்கலைக் கழகங்கள் செம்மையாக நடக்கும். மாணவர் சேர்க்கையில் தொடங்கும் அழுத்தம், தொடர்ந்து தேர்வு முடிவுகளை விருப்பப்படி மாற்றுவதற்கு அழுத்தும் நிலை வரை நீடிப்பது நல்லதல்ல. இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டங்கள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிடையே மதிப்பிழந்து வருவதை நாம் உணர வேண்டும். வேதனையான நிகழ்ச்சி இந் நூற்றாண்டின் எழுபதுகளில் பாட்னா பல்கலைக் கழகத்தில் ஒரு வேதனையான நிகழ்ச்சி நடந்தது. குறிப்பிட்ட ஒராண்டில் அப் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் படிப்பு பற்றிய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒர் அரசியல் பெரும்புள்ளியின் குடும்பத்தைச் சேர்ந்தவர், தேர்ச்சி பெறவில்லை. அப் பெரும்புள்ளி, பல்கலைக் கழகத் துணைவேந்தரை நெருக்கிப் பார்த்தார்; பலன் இல்லை. வேந்தரையே பிடித்தார். அவரைக் கொண்டு நெருக்கிப் பார்த்தார். அப்போதும் துணைவேந்தர் வளைந்து கொடுக்கவில்லை. எனவே, கல்விக் குழுவுக்கு முடிவுகளைத் திருத்தும் தீர்மானம் ஒன்று அனுப்பும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த அவையில் அரசு ஊழியர்களே பெரும் பான்மையாக இருந்தனர். அரசின் பெரும்புள்ளி, ஆளுநர் நிழலில் அவர்களைச் சரிக்கட்டிக் கொண்டார். 'அறிவித்த தேர்வின் முடிவை மாற்ற எவ்வித நியாயமும் இல்லை’ என்று துணைவேந்தர் எடுத்துக்கூறியும் கேளாமல், முடிவைத் திருத்தும் தீர்மானத்தை அந்த அவை நிறைவேற்றி விட்டது. இதைக் கேள்விப்பட்டதும், மெய்யாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கொதித்து எழுந்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது, பிற கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து வெளியேறினர். மேற்படி வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருக்கையில் இந்தியப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களின் கூட்டம் பாட்னாவில் நடக்க நேர்ந்தது. அக் கூட்டம் பல வாரங்கள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டம் நடப்பதற்குச் சிலநாள்கள் இருக்கையில், வேலை நிறுத்தத்தில் குதித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/743&oldid=788577" இலிருந்து மீள்விக்கப்பட்டது