பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தலை உரிமையோடு செயல்பட விடுங்கள் 725 மாணவர்கள் மேற்படி கூட்டம் நடப்பதற்கு வேண்டிய ஒத்துழைப்பையும், உதவியையும் அளிப்பதாகத் துணைவேந்தருக்கு வாக்குறுதி தந்தார்கள். அதன்படியே நடந்தார்கள். துணைவேந்தர்கள் எல்லாம் பாட்னாவில் இருந்தவரையில் வேலை நிறுத்தம் நீடித்தது. அதே நேரத்தில், மாணவத் தொண்டர்கள், கூட்டம் நடப்பதற்கு வேண்டிய பலவகை உதவிகளைச் செய்து கொடுத்தார்கள். அவர்களின் வரம்புக்கு உட்பட்ட எதிர்ப்பைக் கண்டு எல்லாரும் வியந்தனர். தேர்வு முடிவை மாற்றியதைப் பற்றி விசாரிக்க, அனைத்து இந்திய மருத்துவக் கல்விக் கழகமும், அனைத்து இந்திய பல்கலைக் கழகங்களின் மன்றமும் உட்குழுக்களை நியமித்தன. விசாரணை நடந்தது. முடிவு என்ன? ‘வெளியிட்ட முடிவுகளைப் பிறர் தலையீட்டால் பின்னர் மாற்றியது உண்மை’ என்பது புலனாயிற்று. அவ்வாண்டு பாட்னா மருத்துவத் தேர்வுகளை ஒப்புக் கொள்வதில்லை என்று இரு கழகங்களும் முடிவு செய்தன. விளைந்த கேடுகள் எவரோ செய்த குற்றத்துக்காக எவர் எவரோ துன்பப்பட நேரிட்டது. அப் பாதிப்பு பாட்னா பல்கலைக் கழகத்தோடு நிற்க வில்லை. சில வெளிநாடுகள் இந்திய மருத்துவப் பட்டங்களைச் சில ஆண்டுகளுக்கு ஏற்பதில்லை என்று முடிவுசெய்துவிட்டன. இதனால் நமக்கு ஏற்பட்ட பேரிழிவு ஒரு பக்கம் இருக்க, நம் மருத்துவர்கள் அந் நாடுகளில் வேலை செய்ய முடியாத தீங்கான நிலை உருவாகிவிட்டது. T எவரோ ஒரு பெரும்புள்ளி தமது செல்வாக்கைப் பயன்படுத்திப் பல்கலைக் கழகத் தேர்வு முடிவைத் தன் விருப்பம்போல் திருத்திக் கொள்வது, குடிசைப் பகுதியில் வாழும் சிறுபிள்ளை, தீப்பந்தத்தோடு விளையாடுவதற்கு ஒப்பாகும். ஒருவர் தன்னலத்தால் துாண்டப்பட்டுத் தவறு செய்தால், அது பலரைப் பாதிக்கிறது. நாட்டு நலனில், மக்களின் எதிர்காலத்தில் அக்கறை உடையவர்கள் மேற்படி தவறைச் செய்யமாட்டார்கள். அத்தகைய சான்றோர் களைத் துருவித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/744&oldid=788578" இலிருந்து மீள்விக்கப்பட்டது