உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

725 81. கி.பாலசுப்பிரமணிய அய்யர் ஆட்சிக்குழு உறுப்பினரானார் 'தன்னிலும் மூத்தவரும் தன்னிலும் அதிகப்பட்டறிவு உடைய வரும் சொல்ல வேண்டிய கருத்துகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்லத் தயங்காத வருமான ஒருவர், தான் செயல்படும் சூழலில் உடனிருந்தால், சில நெருக்கடிகளில் பெருந்துணையாகும்’ என்று என்னை உருவாக்கிய திரு. சதாசிவ ரெட்டியார் சொல்லுவார். பண்பாளர் கி.பாலசுப்பிரமணிய அய்யர் நான் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுப்பு ஏற்றபோது, மேற்கூறிய இயல்புகள் உடைய ஒரு பெரியவர் ஆட்சிக் குழுவில் உறுப்பினராக இருந்தார். அவர் பலமுறை ஆட்சிக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதோடு அவர் சட்டமன்ற மேலவையில் பட்டதாரித் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக விளங்கினார். தெரிந்து பேசும் - அளந்து பேசும் - இயல்புடைய அவர் சிறந்த பண்பாளர். அப் பெரியவர் பெயர், மாண்புமிகு கி.பாலசுப்பிரமணிய அய்யர் என்பதாம். ஏற்கெனவே நான் அவரோடு ஆட்சிக் குழுவில் இருந்து பல்லாண்டுகள் பணிபுரிந்தவன். நான் துணைவேந்தர் பதவி பெற்றதைப் பற்றி அவர் அழுக்காறு கொள்ளவில்லை. மாறாக எனக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்; நான் நன்றாகச் செயல்பட உதவினார். திரு. பாலசுப்பிரமணிய அய்யர் பதவிக் காலம் 1970ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இயல்பாக முடிவுக்கு வந்தது. தம் மூத்தவயதில் மீண்டும் தேர்தலில் நின்று, ஆட்சிக் குழுவிற்குப் போட்டியிட அவர் விரும்பவில்லை. அதைக் கேள்விப்பட்ட நான் அவரோடு தனியே பேசினேன். என் விருப்பம் “தாங்கள் தேர்தலில் போட்டியிட விரும்பாவிட்டால் பரவாயில்லை. ஆளுநர் ஆட்சிக் குழுவிற்கு மூவரை நியமிக்க வேண்டும். அம் மூவருள் ஒருவராகத் தாங்கள் வந்தால், நன்றாக இருக்கும்” என்று நான் அவரிடம் கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/745&oldid=788579" இலிருந்து மீள்விக்கப்பட்டது