பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730 நினைவு அலைகள் சுவையான நிகழ்ச்சி பெரும் நகரம் ஒன்றில் நடந்துவரும் பெண்கள் கல்லூரி முதல்வர் ஒருவர், வரிசை மாறி ஒருவரைச் சேர்க்க விரும்பினார். அதற்கு நான் இடங்கொடுக்கவில்லை. இது மற்ற முதல்வர்கள் முன்னிலையில் நடந்தது. அம் முதல்வருக்குச் சொல்ல முடியாத வருத்தமும், வெகுளியும் ஏற்பட்டது. குறிப்பிட்ட மாணவி அக் கல்லூரியில் நடக்கும் மடத்தைச் சேர்ந்தவர் உரிய காலத்தில் அக் கல்லூரியில் சேர்ந்து பேராசிரியராகப் பணியாற்ற வேண்டியவர். அத்தகைய மாணவிக்கு இடம் இல்லை என்றால் கல்லூரி எதற்கு நடத்துவது?’ என்று மற்றவர்கள் முன்பாக வேதனையைத் தெரிவித்தார். வழி கண்டுபிடித்தேன் நான் அடம் பிடிக்கவில்லை. அதே நேரத்தில் விட்டுக் கொடுக்கவும் இல்லை. பலர்முன், “அம்மையிர் இவ்வாண்டு சேர்க்கையை முடிப்பதற்கு முன்னால் இதுபற்றி என்னோடு தொடர்பு கொள்ளுங்கள். அதற்கு ஒரு வழி கண்டுபிடித்து வைக்கிறேன்” என்று கூறி அமைதிப்படுத்தி அனுப்பினேன். அம் முதல்வர் குறிப்பிட்ட நாளன்று தொலைபேசி வாயிலாக என்னோடு தொடர்பு கொண்டார். "அப் பிரிவில் ஏதாவது இடம் காலியாயிருக்கிறதா?” என்று கேட்டேன். “இல்லை” என்று பதில் உரைத்தார். அப் பிரிவு சோதனைக்கூடம் தேவைப்படாத படிப்பு. எனவே கூடுதலாக குறிப்பிட்டமானவியைச் சேர்த்துக்கொள்ள உரிமை கொடுத்தேன். நிருபரின் உளவு ஒரு மணி ஒடிற்று. அக் கல்லூரி முதல்வரே என்னைக் காண அலுவலகம் வந்துவிட்டார். உடனே பேட்டி கொடுத்தேன். “உங்களுக்கு நன்றி சொல்வதோடு, உங்கள் விவேகத்தைப் பாராட்டவும் நேரில் வந்துள்ளேன். “சேர்க்கை தொடங்கின நாள் முதல், இன்று மாலை மூன்று மணிவரை, எங்கள் கல்லூரி வளாகத்தில் நாளிதழ் ஒன்றின் செய்தியாளர் முற்றுகையிட்டிருந்தார். “மதிப்பெண் குறைந்தவர் களுக்கு இடம்கொடுக்கிறார்களா? என்று கண்காணித்து, உளவு சொல்லும்படி, அவருடைய முதலாளி அவரை அனுப்பியிருந் தாராம். அவர் அப் பணியைத் திறமையாகச் செய்தார். இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/749&oldid=788583" இலிருந்து மீள்விக்கப்பட்டது