உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் துணைவேந்தராகச் செயல்பட்டபோது . . . 729. இரண்டாம் கல்லூரி எது? மூன்றாம் கல்லூரி எது? என்று குறிப்பிட வேண்டும். அதோடு அந்த அந்த மூன்று கல்லூரிகளுக்கு ஒவ்வொரு படி அனுப்பி வைக்க வேண்டும். அத்தனை விண்ணப்பங்களையும் பல்கலைக் கழக அலுவலகம் பாடவாரியாக மதிப்பெண் அடிப்படை வரிசையில் தொகுத்து வைக்கும். கல்லூரி முதல்வர்களும் தங்களுக்கு வந்த விண்ணப்பங் களை மதிப்பெண் வரிசைப்படி தொகுத்துக் கொள்வார்கள். தொகுத்துக்கொள்வதோடு எவர் எவரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று முதல் கருத்தோட்டம் ஏற்படுத்திக் கொள்வார்கள். முறைப்படி நடந்தது போதிய முன் அறிவிப்புக்குப்பின் சென்னைப் பல்கலைக் கழக அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட முதல்வர்கள் மட்டும் துணை வேந்தர் தலைமையில்கூடி மாணவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படித் தேர்ந்து எடுக்கையில், அதிக மதிப்பெண் பெற்றவர்க்கு முதலில் இடம் கொடுத்துவிட்டு, மற்றவர்களைப் பின்னர் சேர்ப்பார்கள். இடஒதுக்கீடு செயல்படுகிறதா? வெடிட்யூல்டு வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது அரசு ஆனை. அதைப்பற்றிப் பல்கலைக் கழகம் பல்லாண்டு அக்கறை காட்டாதிருந்தது. எனவே, ஆனையின் நடைமுறையைக் கண்காணிக்கிற பொறுப்பு முழுவதும் கல்வி இயக்குநருடைய தலையில் விழுந்தது. என் துணைவேந்தர் பதவிக் காலத்தில் அப் பொறுப்பை ஒரளவு பல்கலைக் கழகம் ஏற்றுக் கொண்டது. மேல் பட்டப் படிப்பு சேர்க்கையில் இடஒதுக்கீடு விழுக்காடு செயல்படுகிறதா என்று கண்காணித்தேன். வழக்கு போடவில்லை o பல்கலைக் கழக இணைப்பில் மேல் பட்டப் படிப்பு சேர்க்கை நடந்ததால், ஒவ்வொரு பிரிவிலும் அதிக மதிப்பெண் பெற்றவர் களையே தேர்ந்தெடுக்க முடிந்தது. நான் பதவியிலிருந்த ஆறாண்டு காலத்திலும் அதிக மதிப்பெண் பெற்றவரை விட்டு விட்டு, குறைந்த மதிப்பெண் பெற்றவரைச் சேர்த்துக் கொண்டார்கள் என்று எவரும் வழக்காட நேரிடவில்லை. மதிப்பெண் வரிசையை மதிப்பதில் விழிப்பாயிருந்தோம். இப்போது ஒரு சுவையான நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/748&oldid=788582" இலிருந்து மீள்விக்கப்பட்டது