உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 நினைவு அலைகள் முதல்வரின் ஒப்புதல் முதலமைச்சர் தயங்காது ஒப்புக் கொண்டார். மற்ற இரு நியமன உறுப்பினர்கள் பற்றியும் என்னோடு பேசினார். எவர் எவர் வருவது என்று அப்போது முடிவு செய்யப்பட்டது. அப்படியே சில நாள்களில் ஆளுநரின் நியமன ஆணை வந்தது. திருவாளர்கள் பாலசுப்பிரமணிய அய்யர், ம.பொ. சிவஞானம், அன்பழகன் ஆகிய மூவர் ஆட்சிக் குழுவுக்கு நியமிக்கப்பட்டார்கள். நிர்வாகிகளும் அலுவலர்களும், அரசியல்வாதிகளாக மாறிச் செயல்படும் கோணலைப் பலபோது கேள்விப்படுகிறோம். அரசியல்வாதிகளாகிய சிலம்புச் செல்வரோ, பேராசிரியரோ அரசியல் பண்ணுகிறார்கள் என்று யாரும் குறைப்பட்டுக் கொள்ள முடியாத அளவு பல்கலைக் கழகத்தின் பெருமைக்குக் காவலர் களாகவே என்னோடு ஒத்துழைத்தார்கள். அவர்கள் வழிகாட்டலுக்கும் ஒத்துழைப்புக்கும் பெரிதும் நன்றி உடையேன். 82. நான் துணைவேந்தராகச் செயல்பட்டபோது . . . தவறான கருத்து மேல் பட்டப் படிப்பிற்குப் பல்கலைக் கழகம் மாணவர்களைத் தேர்ந்து எடுப்பதாக ஒரு தவறான கருத்து பலரிடையே பரவியிருந்த கால கட்டத்தில் நான், சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராகப் பொறுப்பேற்றேன் உண்மையான நிலை என்ன? மேல் பட்டப் படிப்புக்கு ஒவ்வொரு கல்லூரியும் தனித்தனியே மாணவர்களைத் தேர்ந்து எடுப்பதற்குப் பதில், சம்பந்தப்பட்ட எல்லாக் கல்லூரி முதல்வர்களும் ஒன்றாக உட்கார்ந்து, தகுதி அடிப்படையில் மாணவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். துணைவேந்தர் இனைப் பாளராகவும், தேர்வுக் கூட்டங்களுக்குத் தலைவராகவும் செயல்பட்டார். - மேல் பட்டப் படிப்பிற்கான விளம்பரங்களைக் கல்லூரிகளின் சார்பில் பல்கலைக் கழகம் வெளியிடும்; விண்ணப்பத் தாள்களை வழங்கும். ஒவ்வொரு விண்ணப்பத் தாளிலும் நான்கு படிகள் இருக்கும். அவற்றைப் பூர்த்தி செய்து பல்கலைக் கழகத்துக்கு ஒருபடி அனுப்ப வேண்டும். அதில் மாணவன் விரும்பும் முதல் கல்லூரி எது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/747&oldid=788581" இலிருந்து மீள்விக்கப்பட்டது