பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/751

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732 நினைவு அலைகள் எனவே தரம் குறையாது மேல் பட்டப் படிப்பு இடங்களை அதிகப்படுத்த முடிந்தது. நான் பதவி ஏற்றபோது முதுகலை, முதுநிலை வாணிகம், முதுநிலை அறிவியல் பிரிவுகளில் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்தொன்பது இடங்கள் இருந்தன. நான் ஒய்வு பெறும்போது இவற்றின் எண்ணிக்கை இரண்டாயிரத்து அறுநூறாக உயர்ந்தது. சிறு நகரங்களுக்கும் மேல் பட்டப் படிப்பு ஈரோடு, சேலம், பரமத்தி வேலூர், தஞ்சை, பூண்டி, மயிலாடுதுறை போன்ற சிறுநகரக் கல்லூரிகளும்கூட மேல் பட்டப் படிப்பு இணைப்பைப் பெற்றன. கல்வி நிர்வாகம் கட்டுப்படுத்தும் நிர்வாகமாக இய்ங்குவது ஒருமுறை. கட்டுப்பாடு குலையாமல், வளர்த்துக் கொண்டே போகும் முறை மற்றொருமுறை நான் பின்பற்றியது பிந்திய முறை. இதனால் எளியவர்கள் பலர் மேல் பட்டப் படிப்புப் படிக்க வாய்ப்புகள் பெருகின. மேல் பட்டப் படிப்பை வளர்க்கையில் அடுத்த அடுக்குக் கல்வி நினைவுக்கு வராமல் போகுமா? ஆய்வுப் பட்டங்களின்மேல் என் சிந்தனை சென்றது. உரிய வல்லுநர்களைக் கலந்துகொண்டு எம்.பில், பி.எச்.டி பட்டங்களுக்கான விதிமுறைகளைத் தாராளப் படுத்தினேன். அதன் விளைவு என்ன? பி. எச். டி. படிப்பு நான் பொறுப்பு ஏற்றபோது நூற்றுப் பதின்மூன்று பேர்கள் பி.எச்.டி. பட்டத்திற்காக ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆறாண்டுகளில் பி.எச்.டி ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கையை இருநூற்று அறுபதாக உயர்த்த முடிந்தது. - தர உயர்வு இன்று தமிழ்நாட்டின் நாட்டுப்புறங்களில் பிறந்து வளர்ந்தவர்களில் பலர் ஆய்வுப் பட்டம் பெற்றுப் பல்வேறு நாடுகளில் நல்ல புகழோடு பணிபுரிகிறார்கள். தகுதி அற்றவர்கள் என்று அவர்களில் எவரும் நம் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப் படவில்லை. படிப்பில் மெல்ல வளர்வோர் எல்லாம், கல்வி வாய்ப்புகளுக்கு லாயக்கற்ற மக்குகள் என்று புறக்கணித்தல் நல்லதல்ல; நம் மாணவர்களில் பலர் நம் நாட்டில் பெறும் தேர்ச்சியை விடாது பிறநாடுகளில் படிக்கும்போது பெறும் தரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/751&oldid=788586" இலிருந்து மீள்விக்கப்பட்டது